உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோதல் முடிவுக்கு வருமா? ராமதாஸ் உடன் அன்புமணி சந்திப்பு

மோதல் முடிவுக்கு வருமா? ராமதாஸ் உடன் அன்புமணி சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாசை நேரில் சந்தித்து அன்புமணி பேசினார். இதனால் மோதல் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். பா.ம.க.,வில், 108 மாவட்டச் செயலர்கள், 108 மாவட்டத் தலைவர்கள் உள்ளனர். ஆனால், ராமதாஸ் கூட்டிய கூட்டத்தில், 13 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q0zwyvxj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால், அதிர்ச்சி அடைந்த ராமதாஸ், மாநிலப் பொருளாளர் மற்றும் மாவட்டச் செயலர்கள் சிலரை நீக்கிவிட்டு. புதியவர்களை நியமித்தார். சமீபத்தில் அளித்த பேட்டியில், 'தலைமைப்பண்பு இல்லாதவர்' என, அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை, ராமதாஸ் முன்வைத்தார்.இந்நிலையில், இன்று (ஜூன் 05) தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாசை நேரில் சந்தித்து அன்புமணி பேசினார். ராமதாஸ்- அன்புமணி ஆகிய இருவரும் அரைமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் மோதல் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

naranam
ஜூன் 05, 2025 22:11

வந்தால் என்ன வரா விட்டால் தான் என்ன? ஓரமா போங்க ! வீட்டுக்கும் நாட்டுக்கும் ஒரு பயனும் இல்லை பாமக என்ற கட்சியால்..


திருட்டு திராவிடன்
ஜூன் 05, 2025 15:43

இந்த அயோக்கிய மரம் வெட்டி ஜாதி கட்சி ஒழிய வேண்டும்.


பாரத புதல்வன் தமிழக குன்றியம்
ஜூன் 05, 2025 14:09

இவனுக மோதல் ஒரு காமெடி நாடகம்...ஒரு எம்பி பதவியும் குரங்கு கையில் குடுத்த பூமாலை கதை ஆனது.. தற்பெருமை தகப்பன், தற்குறி மகன் பொறுப்பில் இருக்கும் கட்சிகளின் நிலை ஒருநாள் இலங்கையில் ஏற்பட்ட விளைவு குடும்ப ஆதிக்கம் கொண்ட அனைத்து கட்சிக்கும் வரும்.


V K
ஜூன் 05, 2025 13:14

எல்லாமே நாடகமா


Raja k
ஜூன் 05, 2025 11:29

டெல்லி நெருக்கடி, மதுரை வரும் அமிஷ்தாவுக்கு முன் கூட்டணியை முடிவு செய்ய மகன் ஆவலாய் அணலாய் பறக்கிறார்,,,


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 05, 2025 11:06

இல்லாத மேடை தன்னில் எழுதாத நாடகத்தை எல்லோரும் பார்க்கின்றோம்


sundarsvpr
ஜூன் 05, 2025 10:57

அரசியலில் ஒரு சில கட்சிகளை தவிர மற்ற கட்சிகளில் வாரிசுதான் தலைமை ஏற்று கட்சியை மட்டுமல்ல அரசை நடத்தமுடியும். குடும்ப அரசியலுக்கு வித்திட்டவர்கள் இந்திரா மற்றும் முத்துவேல் கருணாநிதி இவர்கள் கீழ் எல்லா ஜாதியினர் வகுப்பினர் இருந்தனர். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி அப்படியில்லை. இந்த கட்சி அரசை பிடிக்க வாய்ப்பில்லை. காரணம் அன்புமணி மற்றும் ராமதாஸ் கூடலூ சிதம்பரம் தவிர வேறு இடங்களுக்கு சென்றதாக செய்திகள் இல்லை. இன்று நமக்கு தேவை நொண்டி ராமமூர்த்தி ஜீவா பாலதண்டாயுதம் போன்ற தலைவர்கள். குடும்ப வாரிசு அரசியல் மாற. .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை