உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் பஸ் மோதினால் நிவாரணம் மறுப்பா? : சீமான் கேள்வி

கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் பஸ் மோதினால் நிவாரணம் மறுப்பா? : சீமான் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கள்ளச்சாராயம் குடித்து இறந்தால், 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் தி.மு.க., அரசு, கட்டுப்பாடில்லாமல் ஓடும் பஸ் மோதி இறந்தால், நிவாரணம் வழங்க மறுப்பது வெட்கக்கேடு' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: கடந்த, 2021 செப்டம்பரில், புதுக்கோட்டை மா வட்டம், துடையூர் அருகே, சுரங்கப் பாதையில், மழை வெள்ளம் தேங்கியபோது, அரசு பெண் டாக்டர் சத்யா, அந்த நீரில் மூழ்கி இறந்தார். அதே ஆண்டு, டிசம்பரில், மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல டாக்டராக பணியாற்றிய கார்த்திகேயன், அதிவேகத்தில் வந்த அரசு பஸ் மோதி உயிரிழந்தார். இவர்களுக்கு, நிவாரண தொகையை இன்று வரை வழங்கவில்லை. அதேபோல், செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி டாக்டர் மணிக்குமார், கட்டுப்பாடற்ற அரசு பஸ் மோதி உயிரிழந்தார். மற்றொரு டாக்டர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவங்களுக்கு நிவாரணம் வழங்காத தி.மு.க., அரசு, கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் வழங்கியது. ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிரிழந்த டாக்டர்களுக்கு, நிவாரணத் தொகை வழங்க மறுப்பது வெட்கக்கேடனாது. எனவே, உயிரிழந்த டாக்டர்களின் குடும்பத்திற்கு, தலா 2 கோடி ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

bgm
ஆக 29, 2025 08:34

எங்கே நம்ம முட்டு திலகங்கள்...


பேசும் தமிழன்
ஆக 29, 2025 07:40

மக்கள் குடித்தால்... அவர்களுக்கு வருமானம் வருகிறது.... பஸ் மோதினால் எப்படி வருமானம் வரும்? அதனால் தான் நாட்டுக்காக சாவும் ராணுவ வீரர்களை விட.... குடித்து சாவும் ஆட்களுக்கு தனி கவனிப்பு செய்கிறது இந்த விடியாத அரசு !!!


உ.பி
ஆக 29, 2025 06:59

ஆமாங்க அதுதான் மாடல் ஆட்சி


Kasimani Baskaran
ஆக 29, 2025 06:48

திராவிடர்களுக்கு பாரம்பரிய தொழில் சாராயம் வடிப்பது, கொள்ளை விலையில் கள்ளத்தனமாக விற்பது, அப்படியே அரசுக்கு குத்தகை மூலம் பெரும் லாபத்துக்கு விற்று கொள்ளை அடிப்பது போல சம்பாதிப்பது. இதில் கடைசி ஒட்டுண்ணியான செபா கமிஷன் மூலம் சம்பாதித்து 350 கோடியில் வீடு கட்ட முடிகிறது என்றால் இதன் பரிமாணத்தை புரிந்து கொள்ள முடியும். இந்த ஈக்கோ சிஸ்டத்துக்கு ஒரு சிறு இடைஞ்சல் வந்தாலும் சம்பாத்தியம் குறையும். ஆகவே அதில் சிறு தடங்கல் வந்தாலும் லட்சங்களை அள்ளி விடுகிறார்கள்


raja
ஆக 29, 2025 06:11

அதெப்படி எங்க குடும்ப தொழிலின் சிறு தவறால் இறப்பவர்களுக்கு 10 லட்சம் கொடுக்கத்தான் வேண்டும்...இப்படிக்கு விடியல் கொள்ளை கூட்ட திருட்டு திராவிட ஓங்கோல் கோவால் புற தலைவன்...


நிக்கோல்தாம்சன்
ஆக 29, 2025 05:42

இப்படியெல்லாம் நிஜசீர்கேடுகளை கேள்வியாக கேட்டால் அந்த கட்சியினருக்கு பகுத்தறிய தெரியாது கோவப்படுவாங்க


சமீபத்திய செய்தி