மேலும் செய்திகள்
நித்திய கல்யாணி ஏற்றுமதி கருத்தரங்கு
28-Oct-2024
சென்னை:உணவு பதப்படுத்தும் தொழில்களில் முதலீட்டை ஈர்க்க, புதிய கொள்கையை தமிழக அரசு வெளியிட உள்ளது. ஏற்கனவே அறிவித்த கொள்கையில் உள்ள பழைய சலுகைகளை, அதிலிருந்து வெட்டி ஒட்டுவதை விடுத்து, தொழில் முனைவோரிடம் கருத்து கேட்டு, ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளை வெளியிட வேண்டியது அவசியமாகும். புதிய சலுகை
தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் தொழிலில், நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கவும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு சலுகைகள் வழங்கவும், உணவு பதப்படுத்தும் தொழில் கொள்கையை தமிழக அரசு வெளியிட உள்ளது. இதை உருவாக்கும் பணியில், டி.என்.அபெக்ஸ் எனப்படும் தமிழக உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, சில நிறுவனங்களுடன் ஆலோசித்து கொள்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கு பதில், தொழில் முனைவோர்களிடம் கருத்து கேட்டு, புதிய சலுகைகளை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுஉள்ளது.இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த 2018ல் உணவு பதப்படுத்தும் தொழில் கொள்கை வெளியிடப்பட்டது. அதில், என்னென்ன அம்சங்கள் இருந்தன என்று, இதுவரை பலருக்கும் தெரியாது. தற்போது, புதிய கொள்கையை உருவாக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசும், மாநில அரசுகளும் வெளியிட்டுள்ள உணவு பதப்படுத்தும் தொழில் கொள்கைகளில் உள்ள அம்சங்களை, 'காப்பி அண்டு பேஸ்ட்' செய்து, புதிய கொள்கையில் சேர்க்கக்கூடாது. நன்மை
அப்படி சேர்த்தால், புதிய கொள்கை என்பது ஏற்கனவே வழங்கப்படும் மானியங்களுடன், சற்று கூடுதல் மானியம் சேர்த்து வழங்குவதாகவே இருக்கும். இதனால், தொழில் முனைவோருக்கு நன்மை கிடைக்காது. தற்போது, உலகம் முழுதும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் துவக்கப்பட்டு வருகின்றன. எனவே, உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள குறைந்தது 500 தொழில் முனைவோர்களை அழைத்து, தொழிலில் காணப்படும் பிரச்னை, அதற்கான தீர்வு, ஊக்குவிப்பு தொடர்பாக கருத்து கேட்க வேண்டும்.அதற்கேற்ப புதிய கொள்கையை உருவாக்க வேண்டும். இதுதவிர, ஏற்றுமதி, சந்தை வாய்ப்பு, புதிய தொழில் நுட்பங்களுக்கு உதவி என, உலகப் போட்டியை சமாளித்து, தொழில் செய்ய உதவும் வகையில், பல்வேறு அம்சங்களுடன் கூடிய கொள்கையை வெளியிட வேண்டும். கொள்கையில், எத்தனை பேரிடம் கருத்து கேட்டு தயாரிக்கப்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும். அப்போது தான், அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
28-Oct-2024