உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தே.ஜ., கூட்டணிக்கு விஜய் வருவாரா? பழனிசாமி முடிவு செய்வார்: பா.ஜ.,

தே.ஜ., கூட்டணிக்கு விஜய் வருவாரா? பழனிசாமி முடிவு செய்வார்: பா.ஜ.,

பெரம்பலுார் : “நடிகர் விஜயின் த.வெ.க.,வை தே.ஜ., கூட்டணியில் சேர்ப்பது குறித்து, கூட்டணியின் தமிழக தலைவர் பழனிசாமி முடிவு செய்வார்,” என பா.ஜ., மாநில பொதுச்செயலர் கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

தமிழகத்திற்கு, தி.மு.க., செய்த துரோகங்களைத் தோலுரிக்கும் நோக்கத்துடனும், மக்கள் மத்தியில் அவற்றை எடுத்துச்சென்று தி.மு.க.,வை வேரறுக்க வேண்டும் என்பதற்காகவும், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நாளை முதல், 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற யாத்திரையை துவங்குகிறார். இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கியது உட்பட பல தலைகுனிவுகளை தமிழகத்திற்கு ஏற்படுத்தியிருக்கும் தி.மு.க.,வினர், 'தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்' என கூறி வருகின்றனர். இவர்களே தலைகுனிவை ஏற்படுத்தி விட்டு, யாரோ தலைகுனிவை ஏற்படுத்தப்போவது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். தமிழகத்தில் கூட்டணி தொடர்பான விஷயத்தில், கரூர் துயர சம்பவத்துக்கு முன், பின், என்று தான் பார்க்க வேண்டும். ​எங்களின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு த.வெ.க., தலைவர் விஜய் வருவாரா, வரமாட்டாரா? என தெரியாது. அதை, தே.ஜ., கூட்டணியின் தமிழக தலைவரான அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தான் முடிவு செய்வார். ​கரூர் துயரத்துக்கு பின், த.வெ.க., நடவடிக்கைகள் மாற ஆரம்பித்திருக்கிறது. ஆளும் கட்சியின் சதியோ என்ற சந்தேகம் கூட த.வெ.க.,வுக்கு இருக்கிறது. விஜய் மீண்டும் பிரசாரத்தை துவங்கும் போது தான், அவர் எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கிறார் என தெரியும். ​த.வெ.க.,வுக்கு மிகப் பெரிய பிரச்னை ஏற்பட்ட போது, ஆதரவாக அ.தி.மு.க., கருத்து தெரிவித்தது. பா.ஜ.,வும் ஆறுதலான கருத்துகளை கூறியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை