மேலும் செய்திகள்
கோடை மழையால் வாரியத்துக்கு லாபம்
20-May-2025
சென்னை:தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள், 9,331 மெகா வாட் திறனில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைத்துள்ளன. மே முதல் செப்., வரையிலான காற்றாலை சீசன் காலத்தில், தினமும் சராசரியாக 8 கோடி யூனிட் காற்றாலை மின்சாரம் கிடைக்கிறது.இந்த மின்சாரத்தை, தனியார் நிறுவனங்கள் சுய தேவைக்கு பயன்படுத்துவதுடன், மின் வாரியத்திற்கும் விற்கின்றன.கடந்த 2024 ஜூலை 9ல் காற்றாலைகளில் 12.02 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக உள்ளது. நடப்பு காற்றாலை சீசன் கடந்த மாதம் துவங்கிய நிலையில், இதுவரைஅதிக நாட்களுக்கு, 10 கோடியூனிட் கிடைத்துள்ளது.கடந்த மாதம் 29ம் தேதி, 10.39 கோடி யூனிட் கிடைத்தது. இதுவே, இந்தாண்டில் இதுவரை கிடைத்த மின்சாரத்தில் உச்ச அளவாக இருந்தது. அதை விட அதிக அளவாக நேற்று முன்தினம் 11.59 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்துள்ளது.வரும் செப்டம்பர் வரை காற்றாலை சீசன் இருப்பதால், நடப்பாண்டில் காற்றாலை மின் உற்பத்தி, புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
20-May-2025