உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை டூ சென்னை வந்த இண்டிகோ விமானத்தின் கண்ணாடி உடைந்தது; நடுவானில் திடீர் பரபரப்பு!

மதுரை டூ சென்னை வந்த இண்டிகோ விமானத்தின் கண்ணாடி உடைந்தது; நடுவானில் திடீர் பரபரப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மதுரையில் இருந்து இன்று (அக் 11) அதிகாலை சென்னை வந்த இண்டிகோ விமானத்தின் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் இருந்த 76 பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.மதுரையில் இருந்து இன்று (அக் 11) அதிகாலை சென்னைக்கு 76 பயணிகளுடம் இண்டிகோ விமானம் புறப்பட்டஆ. விமானத்தின் கண்ணாடியில் தரையிறங்குவதற்கு முன்பு, விரிசல் ஏற்பட்டது. முன் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதை விமானி கவனித்து, விமான நிலையத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்குத் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும், விமான நிலையத்தில் அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0to3zlel&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பின்னர் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தற்போது, ​​கண்ணாடியை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது கண்ணாடி உடைந்ததுக்கு காரணம் இன்னும் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மதுரைக்கு விமானம் திரும்பும் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மைகாலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு பிரச்னை வருவது மற்றும் அவசர தரையிறக்கம், பயணியர் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

&2992&3006&2972&3006 &2986&3018&2985&3021&2985&3015&2992&3007
அக் 11, 2025 16:49

இது மத்திய அரசு நிறுவனமல்லவா இது சங்கி மாடல் அரசு


Vasan
அக் 11, 2025 16:12

கண்ணாடி உடைந்ததா அல்லது விரிசல் மட்டும் தானா? தயவு செய்து சரியான விவரத்தை பதிவு செய்யுங்கள் நிரூபரே.


அப்பாவி
அக் 11, 2025 14:01

இன்னும் 400 புது விமானங்களுக்கு ஆர்டர் குடுத்திருக்கோம் ஹை. நாமதான் வல்லரசு ஹை...


N Sasikumar Yadhav
அக் 11, 2025 17:04

உனக்கு திராவிட மாடல் சாராயக்கடையே போதும் ஹைங்


Pandi Muni
அக் 11, 2025 11:32

இதுவும் ஒரு திராவிட மாடல் விமான கம்பெனியா இருக்குமோ?


Barakat Ali
அக் 11, 2025 11:20

டவுன்பஸ் கூடப் பரவால்ல ....


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 11, 2025 12:27

ஆமாங்க, சமயத்துல டவுன் பஸ்ல சக்கரம் கழண்டு ஓடிப்போய் ரோட்டோரம் சாய்ஞ்சுடுது. அதுவே பிளேன்ல சக்கரம் கழண்டு நம்ம தலையில விழுந்தா ? டவுன்பஸ் பரவால்ல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை