உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னரை வாபஸ் பெற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

கவர்னரை வாபஸ் பெற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' கவர்னர் ரவியை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழகத்தின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். ஹிந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் கவர்னர்!திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் கவர்னர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழகத்தையும் - தமிழக மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் கவர்னரை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!. இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்

சென்னையில் உள்ள டிடி தமிழ் அலுவலகத்தில் நடந்த ஹிந்தி தின விழாவில் கவர்னர் ரவி பங்கேற்றார். இவ்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது, 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்' என்ற வரி பாடப்படவில்லை. இதனையடுத்து, கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஸ்டாலின் மேற்கண்ட பதிவை வெளியிட்டு உள்ளார்.

கண்டனம்

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: தமிழ்தாய் வாழ்த்து பாடும் பொழுது 'தெக்கனமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்' என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது மாபெரும் தவறாகும். இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 93 )

SIVA
அக் 27, 2024 19:40

இவர் எதிர்கட்சியா இருந்தா முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அறிக்கை , ஆளும் கட்சியா இருந்தா கவர்னர் ராஜினாமா பண்ணனும் , இது தான் தவிடு மாடல்


S.Bala
அக் 21, 2024 13:24

முதலில் இவரை துண்டுசீட்டு சொல்லச்சொல்லுங்கள். பிறகு ஆளுநரை மாற்றலாம் .


V. Kanagaraj
அக் 21, 2024 11:05

திமுகவும் பாஜகவும் ஒரு சமாதானத்துக்கு வந்து விட்டதாகவே தெரிகிறது. ஆந்திர மற்றும் பீகார் முதல்வர்கள் ஏதாவது ஒரு கட்டத்தில் மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் பட்சத்தில் திமுக மத்திய அரசை ஆதரிக்கும். இது உண்மையெனில் இந்த வருடத்தில் கவர்னர் மாற்றம் இருக்கும்.


Balasubramanyam Rajendran
அக் 21, 2024 04:24

There are more pressing needs in TN, waiting for CMs attention. Better he minds that. After all Doordarshan has gven the correct explanation and apology. Honorable Governor has also given a supportive explanation safeguarding the prestige of his position. If CM again persists it is time Modi brings in article 365. It is a long pending due for the state. CM must read and understand when articl 365 can be used and avoid such circumstances and should not misuse the magnanimity of the center.


Lion Drsekar
அக் 20, 2024 21:26

அசையும் பொருளில் , ஆடும் கலையின் நாயகன் நானே எதிலும் இயங்கும் இயக்கம் நானே எதிலும் இயங்கும் இயக்கம் நானே, நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா? நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா , . ஹிரண்யாய நமஹ


mathivanan
அக் 20, 2024 08:30

தமிழ்த்தாய் வாழ்த்தை தவறில்லாமல் முதலமைச்சர் பாடிவிட்டால் ஆளுநர் அவரே ராஜிநாமா செய்துவிடுவார்.. முதல்வர் தயாரா ?


Sridhar
அக் 19, 2024 13:46

இவனுகளுக்கு திமிர் ரொம்பவே அதிகமாயிடுச்சு. மத்திய அரசு கையாலாகாத்தனமா ஊழல் கொள்ளைகள் மேல் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை பார்த்தும், தேர்தலில் மக்கள் மாக்கள் போல் வாக்களித்ததை பார்த்தும் இந்த திமிர் வந்திருக்கவேண்டும். இவன் சொன்னா உடனே பயந்துபோய் வாபஸ் வாங்குற அளவுக்கு கோழைனு நினைக்க விட்டுடீங்களே


Matt P
அக் 19, 2024 13:16

திராவிட நல்திருநாடும் என்ற வார்த்தைகளை இல்லாமல், திருத்தும் அளவுக்கு தமிழை கற்று கொண்டிருக்கிறார் என்றால் ஆளுநர் பாராட்டப்பட வேண்டியவர் தான். தமிழர் திருநாடு அல்லது பாரதத் திரு நாடு என்றால் சரி தான். திராவிட திருநாடு எதற்கு? கருணாநிதி காலத்துக்கும் ஸ்டாலின் காலத்துக்கும் முன் தோன்றி மறைந்தவர். தமிழர் என்றாலும் மலையாள நாட்டில் வாழ்ந்ததால் ஒரு வேளை திராவிட நாடு என்று பாடி இருப்பாரோ என்னவோ. இப்படியெல்லாம் அரசியல் பொழைப்பு நடக்கும் என்று தெரிந்திருந்தால் அந்த வார்த்தைகள் இல்லாமல் பாடியிருக்கலாம்.


RAJ
அக் 18, 2024 22:44

இதற்கு ஏன் கவர்னர் நீக்கப்பட வேண்டும்? திமுக தான் ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் . கொள்ளையோ கொள்ளை 30 ஆயிரம் கோடி கொள்ளை 60 ஆயிரம் கோடி கொள்ளை . லட்சம் கோடிகள் கொள்ளை வெளிநாட்டில் முதலீடுகள். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு மத்திய அரசு சும்மா இருக்கிறது அதனால் இப்படி துள்ளல் . பணத்தை பதுக்கி வைத்த கொள்ளையர்கள் ஜாலியாக வெளியே சுற்றிக் கொண்டுள்ளனர் கேள்வி கேட்க நாதி இல்லை. இன்னும் கொள்ளை அடி என்று மோடி சொல்லிவிட்டார் எனவே யாராலும் எதுவும் செய்ய முடியாது.


Palanisamy T
அக் 19, 2024 08:18

The Governor post is a ceremonial post, not an utive post. The Governor post has its own limitations . சம்பந்தப் பட்ட தொலைக் காட்சி நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டுவிட்டார்கள். இந்த விவகாரத்தில் கவர்னர் அவர்கள் சம்பந்தப்பட்டுள்ளரா என்று தெரியவில்லை.


Palanisamy T
அக் 19, 2024 08:47

நீங்கள் கூறிய ஊழல்களின் கணக்கைப் பார்த்தால் இவர்கள் இந்திய தொழில் அதிபர்களையெல்லாம் மிஞ்சிவிடுகின்ற அளவிற்கு சேர்த்து வைத்துள்ளதைப் போன்று தெரிகின்றது. அப்படியென்றால் மத்திய அரசு ஏன் சும்மாயிருக்கின்றார்கள் தமிழகத்தில் மாநில அரசியல் கட்சி களெல்லாம் தூங்குகின்றார்களா?


RAAJ68
அக் 18, 2024 22:40

கொள்ளையோ கொள்ளை 30 ஆயிரம் கோடி கொள்ளை 60 ஆயிரம் கோடி கொள்ளை . எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு மத்திய அரசு சும்மா இருக்கிறது அதனால் இப்படி துண்ணுகிறார்கள். பிணவராயரின் பணத்தை பறிக்க வைத்த கொள்ளையர்கள் ஜாலியாக வெளியே சுற்றிக் கொண்டுள்ளனர் கேள்வி கேட்க நாதி இல்லை.