உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹைட்ரோ கார்பன் திட்ட ஏல அறிவிப்பை வாபஸ் பெறுங்கள்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

ஹைட்ரோ கார்பன் திட்ட ஏல அறிவிப்பை வாபஸ் பெறுங்கள்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் நிலப்பகுதிகளிலும் கடல்பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்புகள் ஏற்கனவே விடுக்கப்பட்டு, தமிழக மக்களின் கடும் எதிர்ப்புக்கு பின்னர் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்தின் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திறந்தவெளி அனுமதி கொள்கையின் 10வது சுற்று ஏல அறிவிப்பில் தென் தமிழகத்தின் 9990.96 சதுர கிலோ மீட்டர் ஆழ்கடல் பரப்பு இடம்பெற்றுள்ளது. இந்த திட்டம் செயலாக்கப்பட்டால் தமிழ்நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்புகள் ஏற்படும். தமிழகத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உயிரிப்பன்மய வளங்களில் மன்னார் வளைகுடா பவளப்பாறைகள் பகுதியும் ஒன்றாகும். பன்னாட்டளவில் முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் தளமாக தகுதி பெற்றுள்ள இப்பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆழ்கடல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழகத்தின் கடல்வளம் கடுமையாக பாதிக்கப்படும். மீன்வளம் குறைந்து மீனவர்கள் வாழ்வாதாரம் பறிபோகும். காலநிலை மாற்றத்தை அதிகரிக்கும் பசுங்குடில்வாயுக்கள் வெளியேற்றத்தை இத்திட்டம் அதிகமாக்கும். எனவே, இந்த ஆபத்தான ஏல அறிவிப்பை இந்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

D Natarajan
பிப் 27, 2025 16:41

தேவையற்ற கருத்து. மும்பையில் கடலில் தான் எண்ணெய் எடுக்கிறாரகள். இவருக்கு என்னய் எடுப்பது பற்றி என்ன தெரியும் . வன்னியர் வளர்ச்சி பற்றி மட்டும் பேச வேண்டும்.


panneer selvam
பிப் 27, 2025 13:43

Ramdas ji , it is the right time , you should retire now instead of reading reports in everyday morning. No where , the sea bed was damaged due to hydro carbon drilling . In the Gulf , Mexico and UK nearly all their oil fields are in the sea only . We have Bombay Highseas oil fields for the last 25 years , no one could complain .


kulandai kannan
பிப் 27, 2025 13:29

லெட்டர் பேடு கட்சிகளும், ஊடகங்களும் லாவணிக் கச்சேரி ஆரம்பிப்பார்கள். அதிமுக வழக்கம்போல் மதில்மேல் பூனையாக மிக்சர் சாப்பிடும்.


kulandai kannan
பிப் 27, 2025 13:27

உங்க ஆட்டத்தை ளெல்லாம் நிலத்தோடும் மரத்தோடும் நிறுத்திக் கொள்ளுங்கள். கடலுக்குள் போக வேண்டாம்.


karthik
பிப் 27, 2025 12:54

இவன் ஒருத்தன் அந்த காலத்தில் இருந்து அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் எதிர்த்துக்கிட்டே இருப்பான்.. கடலுக்குள் எடுத்தால் உனக்கு என்ன? உலக நாடுகள் எல்லாம் எண்ணெய்வளம் எரிவாயு வளத்தால் தான் நாடாக நாடக தன்னிறைவு அடைந்து இருக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை