உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலி மதுபாட்டில் வாபஸ் செப்டம்பருக்குள் அமல்

காலி மதுபாட்டில் வாபஸ் செப்டம்பருக்குள் அமல்

சென்னை:'காலி மது பாட்டில்களை வாபஸ் பெறும் திட்டம், செப்டம்பருக்குள் தமிழகம் முழுதும் அமல்படுத்தப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்து உள்ளது.'டாஸ்மாக்' கடைகளில், காலி மது பாட்டில்களை வாபஸ் பெறுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கடந்த ஜனவரி முதல், கன்னியாகுமரி, திருவாரூர், தர்மபுரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில், மது பாட்டில்களை வாபஸ் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 'வரும் மே முதல், கடலுார் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும், செப்டம்பருக்குள் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்' என்றார்.இதையடுத்து, இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஏப்ரல் 4க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ