உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர், அமைச்சர் மீதான வழக்கு வாபஸ்: எதிர்த்து தற்போது வழக்கு தொடர முடியுமா?

முதல்வர், அமைச்சர் மீதான வழக்கு வாபஸ்: எதிர்த்து தற்போது வழக்கு தொடர முடியுமா?

சென்னை : மேம்பாலங்கள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றதை எதிர்த்து, பல ஆண்டுகளுக்கு பின் தற்போது வழக்கு தொடர முடியுமா என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.கோவையை சேர்ந்த தொழில் அதிபர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் என்பவர் தாக்கல் செய்த மனு: சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக அளிக்கப்பட்ட புகாரில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வரும், முன்னாள் மேயருமான ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிராக, 2001ல் சி.பி.சி.ஐ.டி., வழக்குப் பதிவு செய்தது. ஊழல் நடவடிக்கையால், 115.50 கோடி ரூபாய் ஆதாயம் பெற்றதாக புகாரில் கூறப்பட்டது. இந்த வழக்கில், ஸ்டாலின் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார்.அத்துடன், இந்த வழக்கில் கருணாநிதி, ஸ்டாலின், பொன்முடி, கோ.சி.மணி உள்ளிட்டோருக்கு எதிராக, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவர்களுக்கு எதிரான வழக்குக்கு, 2005ல் சபாநாயகர் ஒப்புதல் வழங்கினார். 2006ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக, வழக்கு தொடர வழங்கிய ஒப்புதலை சபாநாயகர் வாபஸ் பெற்றார்.சட்டப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டால், பின், அதை ரத்து செய்யவோ, வாபஸ் பெறவோ, அவருக்கு அதிகாரம் இல்லை. எனவே, ஸ்டாலின், பொன்முடிக்கு எதிரான வழக்குக்கு ஒப்புதல் அளித்ததை வாபஸ் பெற்ற, சபாநாயகர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இருவருக்கும் எதிராக, சட்டப்பூர்வமான நடவடிக்கையை தொடர, உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அதாவது, 15 ஆண்டுகளுக்கு முன் எடுத்த முடிவை எதிர்த்து, தற்போது வழக்கு தொடர முடியுமா என்று முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது. இதுகுறித்து விளக்கம் அளிக்க, மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன் 7 க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

R Kay
ஏப் 27, 2024 13:53

வழக்குகள் விரைவில் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டு குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படாத வரையில் அரசியல்வாதிகள் குற்றம் செய்ய, ஊழலில் திளைத்து முத்துக்குளிக்க பயப்படமாட்டார்கள்


P.Sekaran
ஏப் 27, 2024 12:10

இதிலிருந்து மக்களுக்கு தெரிவது என்னவென்றால் அரசியல்வாதிகள் தப்பு செய்தால் சரி செய்ய முடியும் வாபஸ் வாங்க முடியும் மக்கள் செய்த சிறு தவறை சட்டம் தண்டிக்கும் சட்டம் அரசியல் வாதிக்கு வளையும்


ஆரூர் ரங்
ஏப் 27, 2024 10:31

சரி. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கோர்ட் அளித்த தீர்ப்புகள் செல்லும் என்றால் இந்த வழக்கும் செல்லும்.


Barakat Ali
ஏப் 27, 2024 09:15

ஒருபோதும் இந்தியா முன்னேற திராவிட மாடல் விடாது


ram
ஏப் 27, 2024 08:33

super..


GMM
ஏப் 27, 2024 07:41

ஆண்டுகளுக்கு முன் எடுத்த முடிவு தவறானது என்றால், தற்போது தண்டிக்க முடியும் குற்ற நடவடிக்கை மீது விசாரணை முடிவு அவர் ஆயுள் முழுவதும் செல்லும் சிவில் நடவடிக்கையில் கால நிர்ணயம் இருக்கும் ஆதார் ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் சபாநாயகர் அனுமதித்து, அவரே வாபஸ் பெறும் அதிகாரம் இருக்காது கவர்னர் தான் அதிகாரம் பெற்றவர் குற்றவாளி மக்கள் பிரதிநிதிகள் என்பதால், தனக்கு தானே விசாரிக்கும் நடைமுறை இல்லை வேறு மாநிலம் அல்லது மத்திய அரசு விசாரிக்க வேண்டும்


krishnamurthy
ஏப் 27, 2024 08:25

ஆம் அப்படி செய்யலாம்


rama adhavan
ஏப் 27, 2024 06:34

அதிமுக சபாநாயகர் உத்திரவை பின் வந்த திமுக சபாநாயகர் ரத்து செய்தது சரியா என்பது தான் கேள்வி ரத்து தவறு எனில் வழக்குக்கு உயிர் உண்டு


Duruvesan
ஏப் 27, 2024 06:33

தீயமுக முதலாளி வருங்கால பிரதமர் விடியல் வாழ்க


D.Ambujavalli
ஏப் 27, 2024 06:22

பிரசித்தி பெற்ற ‘கொல்றாங்களே ‘ கைது வரலாற்று வழக்கு தண்ணீரில் அமுக்கிய பந்து போல எழும்பி உள்ளது இது என்னடா புதுத் தலைவலி ? இல்


N Sasikumar Yadhav
ஏப் 27, 2024 06:18

தேர்வு ஆணையம் தேர்தல் ஆணையம் மாதிரி இந்த மாதிரியான வழக்குகளை விசாரிக்க சுதந்திரமான ஒரு ஆணையத்தை உருவாக்க வேண்டும்


மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி