உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண் ஏ.டி.ஜி.பி., விவகாரம்; சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடுங்க; ராமதாஸ் வலியுறுத்தல்

பெண் ஏ.டி.ஜி.பி., விவகாரம்; சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடுங்க; ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் பெண் ஏ.டி.ஜி.பி.,யை படுகொலை செய்ய சதியா? என்று கேள்வி எழுப்பிய பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாட்டில் காவல்துறை உதவியாளர்களை தேர்வு செய்வதில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக தமது அலுவலகத்தில் தீ விபத்தை ஏற்படுத்தி தம்மை படுகொலை செய்ய சதி நடந்ததாக தமிழக காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குனரும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராக பணியாற்றியவருமான கல்பனா நாயக் குற்றஞ்சாட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வில் இட ஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், காவல்துறை ஏ.டி.ஜி.பி., ஒருவரே முறைகேடு நடந்ததாக கூறியிருப்பது ஐயத்தை அதிகரித்திருக்கிறது.தமிழ்நாடு காவல்துறைக்கு 621 உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்வில் இட ஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பதில் நிகழ்ந்த குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்று ஆணையிட்டது. அதன்படி பழைய பட்டியலில் இருந்து 41 பேரை நீக்கி விட்டு, புதிதாக 41 பேர் சேர்க்கப்பட்டதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. ஆனால், அதிலும் குளறுபடிகள் இருப்பதால், புதிய பட்டியலை நவம்பர் 18ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் 28ம் நாள் ஆணையிட்டது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தான், காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் பிற பணிகளுக்கான நியமனங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுவதில் நடந்த முறைகேடுகள் குறித்து விரிவான அறிக்கையை தாம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தயாரித்து அளித்ததாகவும், அது கண்டுகொள்ளப்படவில்லை என்றும் காவல்துறை கூடுதல் டி.ஜி.பி., கல்பனா நாயக் குற்றஞ்சாட்டியுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் நியமனத்தில் நடந்த தவறுகளை தாம் சுட்டிக்காட்டிய பிறகு தயாரிக்கப்பட்ட புதிய பட்டியலை கடந்த ஆண்டு ஜூலை 29ம் நாள் தாம் சரிபார்க்கவிருந்ததாகவும், அதற்காக தாம் அலுவலகம் செல்வதற்கு சில நிமிடங்கள் முன்பாக தமது அலுவலக அறை தீப்பிடித்து எரிந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ள கல்பனா நாயக், அது தம்மை படுகொலை செய்வதற்காக நடந்த சதி என்றும் காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவாலிடம் அளித்துள்ள புகார் மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.தம்மை படுகொலை செய்யும் நோக்கத்துடன் தமது அலுவலகத்தில் தீ விபத்து ஏற்படுத்தப்பட்டதற்கு அடுத்த நாளே, திருத்தப்பட்ட பட்டியல் தமது ஒப்புதல் பெறாமல் வெளியிடப்பட்டதாகவும் அந்த புகாரில் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தம்மை படுகொலை செய்ய நடந்த சதி குறித்து காவல்துறை தலைமை இயக்குனரிடம் புகார் கொடுத்து 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். அவரது குற்றச்சாட்டுகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாததற்கும், சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராக இருந்த கல்பனா நாயக் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்பு இருப்பதாகவே தோன்றுகிறது. இந்த விவகாரத்தில் உண்மை என்ன? என்பது மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டியதும், காவல் உதவி ஆய்வாளர்கள் நியமனத்தில் சமூகநீதி நிலைநாட்டப்படுவதும் அவசியமாகும். அதேபோல், காவல் உதவி ஆய்வாளர் நியமனத்தில் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக கல்பனா நாயக்கை படுகொலை செய்யும் நோக்குடன் அவரது அலுவலகத்தில் தீ விபத்து ஏற்படுத்தப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டியது உடனடித் தேவையாகும்.எனவே, உதவி ஆய்வாளர்கள் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க அரசு ஆணையிட வேண்டும். பெண் ஏடிஜிபி கல்பனா நாயக்கை படுகொலை செய்ய சதி நடந்ததாக கூறப்படுவது குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கும் தமிழக அரசு ஆணையிட வேண்டும், இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

மணி
பிப் 04, 2025 04:49

அது இரும்பு கரம் அல்ல தொழுநோய் கை எதற்கும் பயனில்லை! லஞ்சம் மட்டுமே பெறும்!!


kanagasundaram
பிப் 03, 2025 19:11

உயர் நீதி மன்ற உத்தரவை காவல் மற்றும் வருவாய் துறை முழுமையாக அமல் படுத்த தயங்குகின்றனர்.என் உயிருக்கே ஆபத்து வரும் நிலை உள்ளது.இது தான் இன்றைய நிலைமை.


Barakat Ali
பிப் 03, 2025 15:51

பெண் டிஜிபிக்கே பாதுகாப்பு அச்சுறுத்தல் .... விடியல் எதுக்கும் லாயக்கில்லை .... இதுக்கெல்லாம் ஓட்டுப்போட்டவனும் லாயக்கில்லை .....


Sivakumar
பிப் 03, 2025 14:46

Idhuvallavo Dravida Model governance!!


Kasimani Baskaran
பிப் 03, 2025 14:09

உயர் காவலதிகாரிகளுக்கே பாதுகாப்பு கிடையாது. நேர்மையான உயர் அதிகாரிகளுக்கு எல்லையில்லா மன அழுத்தம் கொடுக்கப் பட்டது, படுகிறது. இதற்க்கெல்லாம் தேர்வு ஆட்சியை டிஸ்மிஸ் செய்து ஒரு விசாரணைக்கமிஷன் அமைத்து தீம்க்காவை உண்டு இல்லை என்று ஆக்கவேண்டும்.


Venkateswaran Rajaram
பிப் 03, 2025 13:23

திருடர்கள் கொள்ளையர்கள் என்று வெட்ட வெளிச்சமாக தெரிந்தும் தமிழ்நாட்டை நீங்கள் தான் ஆள வேண்டும் என்று ஆட்சியை கொள்ளையர்கள் கையில் கொடுத்தது யார் தவறு.. வாக்களிப்பது கட்டாயம் என்றால் இந்த கொள்ளையர்கள் காணாமல் போய் விடுவார்கள்.. கொள்ளையர் வாக்கு பெறுவது பெரும்பாலும் பணம், மது, பிரியாணி பெற்று கொள்பவர்களிடமிருந்து தான் ...


K.J.P
பிப் 03, 2025 13:21

இதற்கு திமுகவின் முட்டு சட்டம் ஒழுங்கு இந்தியாவிலேயே சிறப்பான மாநிலம் தமிழ்நாடு தான்


Karuthu kirukkan
பிப் 03, 2025 13:17

எங்களது ஆட்சி எந்த கொம்பனாலும் குறை சொல்லமுடியாத ஆட்சி. போலீஸ் ஸ்டேஷன் பெட்ரோல் குண்டு, ஏடிஜிபி அலுவலகத்தில் தீ வைப்பது ..கொலை மிரட்டல் விடுவது, அண்ணா யூனிவர்சிட்டி மானபங்கம், கொலை கொள்ளை குற்றம் செய்யும் Rs200 ஊபிஸ்களை கண்ணின் இமைபோல காப்பது, பணம் வாங்கி கொண்டு தங்களுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை மிரட்டுவது. எங்களது 4 ஆண்டு ஆட்சி சிறப்பினை இந்த ஈரோடு தேர்தல் வெற்றியே சாட்சி..எதற்கு அஞ்ச வேண்டும் சட்டம் ஒழுங்கு சரியில்லை 356 எதற்கு பயன்படுத்து வேண்டும் ...


Anantharaman Srinivasan
பிப் 03, 2025 12:15

முதல்வர் controlலில் உள்ள போலீஸ் துறையிலேயே தினமும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள். மற்ற துறைகளிலும் ஊழல் லஞ்சத்திற்கு குறைவில்லை. இதைதவிர நாட்டில் கொலை கொள்ளை பலாத்காரம் ரவுடியிசம். இவைகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து மத்திய உளவுத்துறை நடவடிக்கையெடுக்க வாய்ப்பு உண்டா??


Sambath
பிப் 03, 2025 12:11

பெரிய பதவியில் இருப்பவருக்கே இந்த நிலை. இன்னும் எத்தனை குற்றங்கள் புகார்கள் வெளிவராமல் திராவிஷ மாடல் ஆட்சி நடக்கிறதோ????


சமீபத்திய செய்தி