உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.32 கோடி மதிப்பு நிலத்தை அரசுக்கு தானம் வழங்கிய பெண்!

ரூ.32 கோடி மதிப்பு நிலத்தை அரசுக்கு தானம் வழங்கிய பெண்!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில், இணைப்பு திட்ட சாலை அமைப்பதற்காக, 32 கோடி ரூபாய் மதிப்பிலான, 80 சென்ட் நிலத்தை, நகராட்சி நிர்வாகத்திடம் சாந்தா என்ற பெண் தானமாக வழங்கினார்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியில், 1968ம் ஆண்டு அபிவிருத்தி திட்டம் எண், 5ல், பொள்ளாச்சி - பல்லடம் ரோடு - சின்னாம்பாளையம் ரோட்டை இணைக்கும், 66அடி இணைப்புச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதை கடந்த, 2009ம் ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்பின், நிலம் கையகப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், நகராட்சி கமிஷனர் கணேசன், சாந்தாவிடம் பேச்சு நடத்தி இணைப்புச் சாலைக்காக நிலம் வழங்க கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, 80 சென்ட் நிலத்தை தானமாக வழங் க சாந்தா முடிவு செய்தார். நேற்று, நகராட்சி கமிஷனர் கணேசன், நகராட்சி தலைவர் சியாமளா, துணை தலைவர் கவுதமன் ஆகியோரிடம் நிலத்தை தானமாக வழங்கினார். இந்த இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 32 கோடி ரூபாயாகும்.இது குறித்து சாந்தா கூறியதாவது: பல்லடம் ரோட்டில், கணவரின் பூர்விக சொத்து உள்ள இடத்தில் மண்டபம் கட்டப்பட்டது. அங்கு ரோடு அமைக்க, நகராட்சி நிர்வாகம் கடந்த, 2019ம் ஆண்டு நிலம் கேட்டது. விருப்பம் இல்லை எனக்கூறினோம். இதனால், எங்களது சொத்து வரியை உயர்த்தியது. இதை எதிர்த்து கணவர் ஜெயராம் வழக்கு தொடர்ந்தார். நகராட்சிக்கும் எங்களுக்கும் மோதல் போக்காக இருந்தது. இச்சூழலில், கமிஷனர் கணேசன் சமரசமாக பேசி, 49 லட்சம் வரி செலுத்த உத்தரவிட்டார். அவரது செயலால் மனநிறைவு ஏற்பட்டு, 32 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்க முடிவு செய்தேன்.இது குறித்து, எனது மகன், மகளிடம் கலந்தாலோசித்து, எனது 40 சென்ட், மகன், மகளின் தலா, 20 சென்ட் என மொத்தம், 80 சென்ட் நிலம் தானமாக வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நாங்கள் தொடர்ந்த வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. தற்போது, அந்த வழக்குகளை வாபஸ் பெறுகிறோம். இவ்வாறு, சாந்தா கூறினார்.பிரச்னைக்கு தீர்வு நகராட்சி தலைவர் சியாமளா கூறுகையில், ''பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில் இருந்து, பல்லடம் ரோடு வழியாக சின்னாம்பாளையத்துக்கு செல்லும், 66 அடி இணைப்பு திட்ட சாலை தடைபட்டுள்ளது. கடந்த, 16 ஆண்டுகளாக நிலவிய பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.சாந்தா ஜெயராம், தற்போது, இடம் தானமாக வழங்கியதால், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இடம் பெற்று கொடுத்த நகராட்சி கமிஷனர் மற்றும் இடம் தானமாக வழங்கியவருக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள் கிறேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Rathna
ஆக 31, 2025 13:15

ஒரு அரசாங்கத்தை எதிர்த்து ஒரு தனி நபர் போட்டியிட முடியாது. உண்மை என்னவென்றால், அதிக அளவு நில உரிமை ஆபத்தை விளைவிக்கும். குடும்பத்திற்கு பிரித்து கொடுப்பது மட்டும் விற்று வங்கியில் முதலீட்டில், தானத்திற்கு, நல்ல ஆசிரமத்திற்கு எழுதி வைப்பது இந்த மற்றும் அடுத்த பிறவிக்கும் செய்யும் புண்ணிய முதலீடாகும்.


M Ramachandran
ஆக 30, 2025 23:17

என்ன இப்படி அப்பிராணியா யிருக்கீஙக. அரசு நிலத்தியென அபெர்ஸ் பண்ணுவதில் இந்த தீ முகா பிரமுகர்கள். அவ்வளவு தான் ஆட்டைய போட போட்டா போட்டி நடக்கும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 30, 2025 22:11

கருத்துகள் மறைக்கப்படுவதில் இருந்தே 32 கோடி என்பதே திருடுவதற்காக சொல்லப்பட்ட மதிப்பு என்பது தெளிவாகிறது


நிக்கோல்தாம்சன்
ஆக 30, 2025 21:28

சொத்துவரி உயர்த்தி மிரட்டிய நகராட்சி இருக்கத்தான் வேண்டுமா ?


Yasar Arafat Yasar Arafat
ஆக 30, 2025 19:15

அந்த பெண் அரசு மூலமாக வருமானம் பார்த்து விட்டது.


vee srikanth
ஆக 30, 2025 17:48

நல்லது - அந்த சாலைக்கு அவர்கள் பெயரையே வைக்கலாம்


SakthiBahrain
ஆக 30, 2025 17:28

இவங்களோட வைத்துஎரிச்சால் எத்தனை வ....டி அடிபடப்போகுதோ ...


பால் பாண்டி திண்டுக்கல்
ஆக 30, 2025 16:44

ப்ளாக் ஐ ஓயிட்டாக மாற்றியாச்சி


Barakat Ali
ஆக 30, 2025 12:56

பல பிராம்மணர்கள் ஏழைகளுக்குக் கொடுக்காமல் சங்கர மடத்துக்கு வீட்டை, சொத்துக்களை எழுதி வைக்கிறார்கள். அதைப்போலத்தான் இதுவும் .....


எஸ் எஸ்
ஆக 30, 2025 20:09

எழுதி வைக்கும் அளவுக்கு சொத்து, மனசு உள்ளவர்கள் இருக்கிறார்களா? அளவோட உருட்டுங்க கோபால்!


ராமகிருஷ்ணன்
ஆக 30, 2025 23:07

ஏன் பிராமணர்களை மட்டுமே சொல்ரீங்க, முஸ்லிம், கிறிஸ்தவர் செய்வது உங்களுக்கு தெரியல்லேயா, உங்க மதத்தை பற்றி பேச தகுதி இருக்கா.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 30, 2025 12:13

இடத்தை ஆட்டைய போடாம இருப்பாங்களா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை