உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பூர் ரயிலில் தவறி விழுந்த பெண்; தக்க நேரத்தில் உயிர் காத்த பெண் போலீஸ்!

திருப்பூர் ரயிலில் தவறி விழுந்த பெண்; தக்க நேரத்தில் உயிர் காத்த பெண் போலீஸ்!

திருப்பூர்: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய பெண் ஒருவர், தவறி கீழே விழுந்தார். இதைப்பார்த்ததும், ஓடி வந்த ரயில்வே பெண் போலீஸ் திவ்யா, பிளாட்பார இடைவெளியில் கீழே விழுந்த அவரை, ரயில் நிற்கும் வரை, மேலே எழுந்திருக்காமல் அசையாமல் படுத்திருக்குமாறு அறிவுறுத்தினார். அதன்படி படுத்திருந்த சுசீலாவை, ரயில் நின்றதும் பத்திரமாக மீட்டனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து கோவை செல்லும் ரயில், இன்று( ஆக.,29) அதிகாலை திருப்பூர் வந்தது. அந்த ரயில், முதலாவது பிளாட்பாரத்தில் நின்று கிளம்பும் நேரத்தில் திருப்பூரை சேர்ந்த சுசிலா(58) என்ற பெண், தனது பேத்தியுடன் இறங்க முயன்று தவறி விழுந்தார். ஆனால், ரயில் வேகமாக சென்றதால், அவர் பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் இடையிலான இடைவெளியில் விழுந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lkimr2hj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸ் திவ்யா, சுசிலா விழுந்ததை பார்த்து, உடனடியாக அருகில் சென்று அசையாமல் படுத்து இருக்குமாறு கூறினார். இதனை பொருட்படுத்தாமல் பயத்தில் சுசிலா எழ முயன்றார். இருப்பினும், திவ்யா அங்கேயே படுத்து இருக்குமாறு கூறி சுசிலாவுக்கு வழிகாட்டினார்.பெண் ஒருவர் விழுந்ததை பார்த்த பயணி ஒருவர் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்தினார். உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சுசிலாவை வெளியே தூக்கினார். அவரை உயிருடன் காப்பாற்றிய திவ்யாவுக்கு பயணிகள் மற்றும் சக போலீசார் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

chennai sivakumar
ஆக 29, 2025 22:29

போலீஸ் அறிவுறுத்தியும் அந்த பெண்மணி அறிவுரையை பின் பற்றாமல் எழ முற்பட்டார். இவ்வளவு அறிவாளிகள் உள்ளனர் நம் தமிழ் நாட்டில்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 30, 2025 20:38

ஒன்றுக்கும் உதவாத அராஜக திமுக செல்வாக்குடன் இருப்பதைக் கவனித்தாலே புரியுமே அறிவாளிகள் நிறைந்த மாநிலம் என்று ....


V Venkatachalam
ஆக 29, 2025 21:32

தர்மமும் சத்தியமும் உயிரோடு இருக்கின்றன என்பதற்கு இதுவே சாட்சி. அந்த பெண் போலீஸுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பல்லாண்டு வாழ்க.


பிரேம்ஜி
ஆக 29, 2025 21:21

வாழ வைத்த தெய்வம்! பாராட்டுக்கள்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை