உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 குழந்தைகளுடன் கடலில் குதிக்க முயன்ற பெண் மீட்பு

2 குழந்தைகளுடன் கடலில் குதிக்க முயன்ற பெண் மீட்பு

நாகர்கோவில்: குமரி கடற்கரையில், இரு குழந்தைகளுடன் கடலில் குதிக்க முயன்ற பெண்ணை அங்கிருந்த சுற்றுலா பயணியர் மீட்டனர். கன்னியாகுமரி கடற்கரைக்கு நேற்று வந்த பெண் ஒருவர், தன் இரு குழந்தைகளுடன் நீண்ட நேரமாக கடலை பார்த்தபடி அமர்ந்திருந்தார். திடீரென கடலை நோக்கி குழந்தைகளுடன் சென்று குதிக்க முயன்றார். அதை கவனித்த சுற்றுலா பயணியர் ஓடிச்சென்று தடுத்து, குழந்தைகளையும், அவரையும் மீட்டனர். பின், கன்னியாகுமரி போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர். விசாரணையில், ஈத்தாமொழியைச் சேர்ந்த பெண் என்பதும், குடும்ப பிரச்னையால் தற்கொலை முடிவுடன் கன்னியாகுமரி வந்ததும் தெரிந்தது. எஸ்.பி., ஸ்டாலின் உத்தரவின்படி, பெண் போலீசார் அவருக்கு அறிவுரை வழங்கி, குழந்தைகளையும், அவரையும், வீட்டிற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 29, 2025 09:11

அநேகமாக அந்த பெண்ணின் கணவன் மதுபோதைக்கு ஆளாகி இருப்பான். தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியையும், குழந்தைகளையும் அடித்து துப்புறுத்தி இருப்பான். திமுக ஆட்சியின் சாதனை இந்த மது. அது குடிமக்களுக்கு எவ்வளவு வேதனை என்று பாருங்கள்.


முக்கிய வீடியோ