உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரும்புச்சாறு இயந்திரத்தில் சிக்கியது பெண்ணின் கை

கரும்புச்சாறு இயந்திரத்தில் சிக்கியது பெண்ணின் கை

தென்காசி: -தென்காசி புதிய பஸ் ஸ்டாண்ட் மெயின் ரோட்டில் கேரளாவை சேர்ந்த ஜிஜு, அவரது மனைவி மினி கரும்பு ஜுஸ் மிஷின் வைத்து தொழில் செய்கின்றனர். நேற்று காலை, 11:00 மணிக்கு மிஷினில் சாறு அரைக்க, மினி அதை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது அவரது இடது கை தவறுதலாக மிஷினில் உள்ளே சிக்கிக்கொண்டது. தென்காசி தீயணைப்பு படையினர் வந்தும் எதுவும் செய்ய முடியவில்லை. அருகில் உள்ள வெல்டிங் பட்டறை ஊழியரை வரவழைத்து, இரும்பு பாகங்களை வெல்டிங் மிஷின் மூலம் துண்டித்து அப்புறப்படுத்தினர். பின் அவரை காயங்களுடன் மீட்டு, சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை