வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சிலீன்டர் விலைய 250 ரூபாய்ல இருந்து 270 க்கு மாற்றியபோது, நீ வானத்துக்கும் பூமிக்கும் குதிச்ச?
சென்னை: தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை நேற்று அளித்த பேட்டி: வந்தேமாதரம் பாடலின், 150வது ஆண்டை கொண்டாட பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இதற்காக, வரும் 7, 8ம் தேதிகளில் பிரமாண்ட விழாக்கள் பா.ஜ., சார்பில் நடத்தப்படும். சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு, வந்தே மாதரம் பாடல்களும், சுதந்திரத்துக்காக நடந்த போராட்டங்கள் தான் காரணம். தமிழகத்தில் பெண், தோழனுடன் இருந்தாலும், பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார். தமிழகத்தில் சுதந்திர போராட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் பெண்கள் உள்ளனர். குஜராத், உ.பி., - ம.பி.,யில் பாலியல் வன்கொடுமை நடந்திருந்தால், ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள், உடனே கண்டனம் தெரிவித்திருப்பர். அவர்கள், தமிழகத்தில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால், கருத்து தெரிவிக்க மாட்டார்கள். போராட்டமும் நடத்த மாட்டார்கள். கஞ்சா விற்பவர், 'குடி'மகன்கள் தான், தமிழகத்தில் சுதந்திரமாக நடந்து செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
சிலீன்டர் விலைய 250 ரூபாய்ல இருந்து 270 க்கு மாற்றியபோது, நீ வானத்துக்கும் பூமிக்கும் குதிச்ச?