உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம்: கூடுதல் பயனாளிகளை சேர்க்க விதிமுறை தளர்வு

மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம்: கூடுதல் பயனாளிகளை சேர்க்க விதிமுறை தளர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும், 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்தில் கூடுதல் பயனாளிகளை சேர்ப்பதற்காக, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிப்படி, 2023 செப்டம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேர, 1.63 கோடி பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்ய, பல்வேறு விதிமுறைகளை அரசு விதித்திருந்தது. அதாவது, ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், வருமான வரி தாக்கல் செய்வோர், மாநில -- மத்திய அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், உள்ளாட்சி, கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள். சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போர், ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்து ஜி.எஸ்.டி., செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.ஏற்கனவே ஓய்வூதியம் மற்றும் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற தகுதி இல்லாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, தகுதி இல்லாதவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 1.06 கோடி பேருக்கு மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் அதிருப்தியடைந்தனர்.அதைத்தொடர்ந்து, நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, புதிதாக 90,000 பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது. தற்போது 1.15 கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், விடுபட்ட பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளை தேர்வு செய்வதற்கான விதிமுறைகளில் தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறும் குடும்ப பெண்கள்; இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய முதியோர் ஓய்வூதியம், அரசு ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத பெண்கள், உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள், திட்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுவர். இதற்கான அரசாணையை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார். திட்டத்திற்கான விதிகளில் விலக்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஏற்கனவே விண்ணப்பம் அளித்து நிராகரிக்கப்பட்ட 48 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்க உள்ளது.அத்துடன் புதிதாக ரேஷன் அட்டை பெற்றுள்ளோரும் உரிமைத்தொகை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் சேர்க்கை விரைவில் துவக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

V Venkatachalam
ஜூன் 30, 2025 14:56

ஆஹா மெகா கொள்ளைக்கு இன்னுமோர் வழி. கண்டுபிடிப்பு.


சிந்தனை
ஜூன் 30, 2025 09:37

நல்லவேளை நல்லா செஞ்சீங்க மக்களை தன்மானம் உள்ளவர்களாகவும் தன் காலில் வாழ்பவர்கள் ஆகவும் வைத்து விடவே கூடாது எப்போதும் பிச்சைக்காரர்களாகவே வைத்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் அவர்கள் நம்மை பாராட்டிக் கொண்டே இருப்பார்கள் நம்முடைய தாழ்வு மனப்பான்மைக்கும் நல்ல தீனி கிடைக்கும்


ஆதிநாராயணன், குவைத்
ஜூன் 30, 2025 09:29

சதுரங்க வேட்டை ஆரம்பம்


சுந்தர்
ஜூன் 30, 2025 05:03

நடத்துங்க நடத்துங்க ஓட்டு போட்டு ஜெயிக்க வைப்பாங்க. தி.மு.க உறுப்பினர் அனைவருக்கும் உண்டு என்றும் சொல்லிடுங்க.


Palanisamy Sekar
ஜூன் 30, 2025 04:55

சபாஷ் ஓட்டுக்கு பணத்தை அரசு கஜானாவிலிருந்தே வாரி வழங்கும் இந்த கடன்கார அரசினை கண்டிக்க யாருமே இல்லையே. நான்கரை லட்சம் கோடி பணத்தை கடனாக வாங்கி அதற்கு மாதம் ஐம்பதாயிரம் கோடி வட்டி செலுத்தும் இந்த கேவலமான செயலை கண்டிக்க யாருமே கிடையாது போல. கட்சிக்காரர்களின் குடும்ப உறுப்பினர்களே அதிகம் பயனாளியாக இருப்பதாக புகார்கள் வாசிக்கப்பட்ட போதும் கண்டுக்காத எதிர்க்கட்சிகளும் ஆளும் தரப்பும் சரி இந்த மாநிலத்தை சீரழித்துவருகின்றார்களே. இப்படியே வேடிக்கை பாருங்கள் எதிர்கட்சியினரே...அடுத்தும் இதே ஆளும் கட்சியே தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் உங்களது ஈகோ இந்த மாநிலத்தை சீரழிப்பதால் உங்களுக்கு என்ன நஷ்டம். எதிர்த்தவர்கள் எல்லோரும் தளர்ந்துபோய்வ்ட்டார்கள் இந்த எதிர்க்கட்சிகளின் தூக்கத்தை கண்டு.


Mani . V
ஜூன் 30, 2025 04:34

ஆட்டை குளிப்பாட்டி, மாலை போடுவது எதற்கு என்று கூட புரிந்து கொள்ள முடியாத சோத்துப் பிண்டங்கள் நினைத்தால் ரொம்பப் பெருமையாக இருக்கிறது.


தாமரை மலர்கிறது
ஜூன் 30, 2025 04:18

ஓட்டுக்கு காசு. இதனால் தமிழகம் திவாலாக போவது உறுதி.


Kasimani Baskaran
ஜூன் 30, 2025 03:48

அரசின் ஒய்வு ஊதியம் வாங்குவோர் எப்படி தகுதி பெற முடியும்? இதை ஓட்டுக்கு லஞ்சம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை