உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்

விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ''விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்'' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக அரசு, மகளிருக்கு மாதம், 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, 2024 செப்டம்பரில் துவக்கியது. விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இது குறித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=93d71gew&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குடும்பத்தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது, 1 கோடியே 34 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பலர் இந்த திட்டத்தில் விடுபட்டுள்ளனர் என்ற செய்தி அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே வரும் ஜூன் மாதம் 4ம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டத்தின் அடிப்படையில், 9000 இடங்களில் கோரிக்கைகள் கேட்கும் இடங்கள் நடைபெறவிருக்கிறது. விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

kumarkv
ஏப் 25, 2025 22:09

இந்த நபர் சொல்வதை யாராவது நம்புவார்களா.


kumarkv
ஏப் 25, 2025 22:07

லஞ்சம் கொடுக்கல்ல பெயர்கள் விட்டு போச்சு


R.MURALIKRISHNAN
ஏப் 25, 2025 19:49

ஆயிரம் ரூபா தாரேன், சேலை வேஷ்டி தாரேன் வாங்கிகிட்டு நீங்க எனக்கு ஓட்டு போட வாங்க - சுடாலின் மைண்ட் வாய்ஸ் ஆயிரமும் வேண்டாம் உங்க பிரியாணி பொட்டலமும் வேண்டாம்....ஆள தெரிஞ்சவன் எவரையாவது எலக்ட் பண்ணிக்கிறோம் .... – மக்கள் மைண்ட் வாய்ஸ்


Priyan Vadanad
ஏப் 25, 2025 17:33

கொடுக்கும் ஆயிரம் ரூபாய்க்கு நல்ல கரி வாங்கி அரசு பெண்களின் முகத்தில் பூசுவதற்கு பதிலாக தன் மூஞ்சியிலேயே பூசிக்கொள்ளலாமே. எதற்காக அடுத்த எலெக்ஷன் வரை காத்திருக்கவேண்டும்.


R.P.Anand
ஏப் 25, 2025 15:35

அப்போ எலெக்ஷன் நெருங்கிட்டா ஆபீசர்


ராஜி
ஏப் 25, 2025 15:07

பெண்கள் புத்திசாலிகள் இந்த முறை ஏமாற மாட்டார்கள்.


Yes your honor
ஏப் 25, 2025 15:00

தேர்தல் நெருங்குகிறது என்றவுடன் விட்டுப் போனவர்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தகிடுதத்தம் ஆரம்பம். இனிமேல் விண்ணப்பிக்கும் மகளிர் அனைவருக்கும் விட்டுப்போன பழைய பாக்கி உரிமைத் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும், அப்பொழுது தான் ஞாயமாக இருக்கும். இல்லாவிட்டால் சிலர் கடந்த பல மாதங்களாக மாதம் ரூ. 1000 வாங்கிவரும் நிலையில் இனிப்புதிதாக பெறுபவர்கள் ஏமாற்றப்பட்டதாகத்தான் அர்த்தம் வரும். மேலும், அவ்வாறு பழைய பாக்கி உரிமைத்தொகையை புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு வழங்காவிட்டால், புதிதாக விண்ணப்பிப்பவர்கள் தகுதியற்ற மகளிருக்குச் சமம் ஆகிறார்கள். புதிய விண்ணப்பதாரர்களுக்கு உரிமைதொகை வழங்க ஆகும் கூடுதல் பணச்சுமையை சமாளிக்க ஒருவேளை டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.50 முதல் 70 வரை விலையேற்றி விடுவார்களோ? குரங்கு கையில் பூமாலையைக் கொடுத்தால் அடிப்படைத் திறமையின்மையால், தனது அறியாமையால், அது அப்பூமாலையை குதரித் தான் எரியுமே தவிர அதனால் உபயோகமாக ஒன்றும் செய்ய முடியாது. விதி வலியது, நாம் செய்த பாவத்தை அனுபவித்தே ஆகவேண்டும்.


HoneyBee
ஏப் 25, 2025 14:53

ஆமாம்.தேர்தல் வந்தா இது மாதிரி நிறையவே வீரு கொண்டு வரும். ஓட்டு ஓட்டு ஓட்டு..


சமீபத்திய செய்தி