உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆளுங் கட்சியினருக்கு சம்மன் அனுப்ப மாட்டீர்களா: போலீசாருக்கு கண்டனம்

ஆளுங் கட்சியினருக்கு சம்மன் அனுப்ப மாட்டீர்களா: போலீசாருக்கு கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மதபோதகர் தாக்கப்பட்ட வழக்கில், தி.மு.க., முன்னாள் எம்.பி., ஞானதிரவியத்திற்கு ஆறு மாதங்களாக, 'சம்மன்' வழங்காதது ஏன்' என, கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், போலீசாருக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சி.எஸ்.ஐ., திருமண்டல அலுவலகம் அருகே, இட்டேரி பகுதியைச் சேர்ந்த மதபோதகர் காட்ப்ரே வாஷிங்டன் நோபல் என்பவரை, கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி, ஞானதிரவியம் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. மதபோதகர் அளித்த புகார் அடிப்படையில், ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது, பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் விசாரணையை விரைந்து முடிக்க, திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மதபோதகர் காட்ப்ரே வாஷிங்டன் நோபல் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஞானதிரவியத்துக்கு எதிரான வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க, திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப் போது, உயர் நீதிமன்ற பதிவு துறை தரப்பில், ஞானதிரவியத்துக்கு எதிரான வழக்கு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதை பார்வையிட்ட நீதிபதி கூறியதாவது:

ஆவணங்களை பார்த்தபோது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான், ஞானதிரவியத்திற்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்ட பின், ஆறு மாதங்களாக, போலீசார் சம்மன் வழங்காதது ஏன்; ஆளும்கட்சியை சேர்ந்தவர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களாக இருந்தால், சம்மன் வழங்க மாட்டீர்களா? மேலும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, சம்மன் வழங்க இயலாது என, தெரிவித்து விட்டால், சம்மன் அனுப்ப தனி பிரிவை உருவாக்க நேரிடும். இல்லையெனில், இது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்பப்படும். இவ்வாறு நீதிபதி எச்சரித்தார். பின், இந்த வழக்கின் விசாரணையை, வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, முன்னாள் எம்.பி., ஞானதிரவியத்துக்கு சம்மன் அனுப்பியது குறித்தும், அவருக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

duruvasar
ஜூலை 22, 2025 12:11

அப்புறம் எப்படீங்க ?


Keshavan.J
ஜூலை 22, 2025 11:07

வோட்டு பிட்சையால் தான் இந்த அரசு வந்தது.


Shankar
ஜூலை 22, 2025 11:04

சரி. நவம்பர் மாதமே சம்மன் அனுப்பி இருந்தாலும், தற்போது 8 மாதங்கள் கடந்து வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லையே. இதை ஏன் அந்த நீதிபதி கேட்க மறுத்துவிட்டார்? ஒருவேளை எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டு களவாணிகளோ என்னவோ?


pmsamy
ஜூலை 22, 2025 10:56

வக்கீல்கள் பல பொய்யான வழக்குகளுக்கு ஆஜராகி வழக்கு நடத்துகின்றனர் அதற்கு நீதிமன்றம் அல்லது நீதிபதிகள் நடவடிக்கை எடுக்க தைரியம் இருக்கா.


SIVA
ஜூலை 22, 2025 09:09

மதசார்பற்ற நபர் ஒருவர் மதசார்பற்ற ஒரு கட்சியை சேர்த்தவரால் தாக்கப்பட்டுள்ளார் , இதுக்கு எப்படி வழக்கு போட முடியும் , வழக்கு போட்டால் மதச்சார்பின்மைக்கு ஆபத்து இது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்போடுவது போன்று என்று அறிக்கை கொடுத்துவிடுங்கள் ....


VENKATASUBRAMANIAN
ஜூலை 22, 2025 08:02

இதுதான் ஊரறிந்த ரகசியம் வாயின் அறவே. நீதிபதிகளுக்கு தெரியாதா. அவர்களிடம் வழக்குகளை பார்த்தாலே தெரியும்.


M S RAGHUNATHAN
ஜூலை 22, 2025 07:15

கையோடு கைது செய்ய தடை குடுங்கள். அவர் கேட்காவிட்டாலும் உடனே ஜாமீன் வழங்கி விடுங்கள். இப்போது பாராளுமன்ற கூட்ட தொடர் நடப்பதால் அழைப்பாணை கொடுக்க முடியவில்லை என்று நீதி மன்றத்தில் காவல் துறை மனு தாக்கல் செய்யும். நீதி மன்றம் அதை ஏற்று குளிர் கால கூட்டம் போது வருமாறு டிசம்பருக்கு வழக்கை தள்ளி, தள்ளி , தள்ளி வைக்கும்.


SUBBU,MADURAI
ஜூலை 22, 2025 07:59

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் ஆதங்கம் இவற்றை தவிர வேறு எதையும் தெரிவிக்க மாட்டார்கள் அவர்களது டிசைன் அப்படி!


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 22, 2025 07:07

தமிழ்நாட்டில் கிட்னி விற்பனையில் உலகின் நம்பர் ஒன்றாக வரப்போகிறது. வெளிநாட்டினால் தமிழ்நாட்டு மருத்துவ மனைகளில் குவிகினறனர், மெடிக்கல் டூர் வருகிறனர்.. திருட்டு கிட்னி ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது ...கிட்னி விற்பனையில் கொள்ளை லாபம் வரும்.. முதலீடு வெறும் கிட்னி விற்கும் ஏழைகள் மட்டுமே ... இனிமேல் அரசியல் வாதிகளும் கிட்னி விற்பனையில் இறங்கிவிடுவார்கள் .. இந்த சாதனையையாவது பாராட்டுங்கள் ..


Rajasekar Jayaraman
ஜூலை 22, 2025 05:09

அப்படியே அனுப்பிட்டாலும் அரசியல் குற்றவாலிகளுக்கு தண்டனை கொடுத்துட்டு தான் மறுவேலை பார்க்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை