உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாலையில் கிடந்த தங்க நெக்லஸ்; போலீசில் ஒப்படைத்த தொழிலாளர்களுக்கு பாராட்டு

சாலையில் கிடந்த தங்க நெக்லஸ்; போலீசில் ஒப்படைத்த தொழிலாளர்களுக்கு பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கமுதி: சாலையில் கிடந்த நான்கரை பவுன் தங்க நெக்லஸை போலீசிடம் ஒப்படைத்த தொழிலாளர்களை அனைவரும் பாராட்டினர்.ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த செந்தில்குமார், 46, பெரிய உடப்பங்குளம் அய்யனார், 32, இருவரும் சி.சி.டி.வி., கேமரா பொருத்தும் தொழில் செய்து வருகின்றனர். நேற்று முதுகுளத்தூர் காந்தி சிலை சுற்றியுள்ள பகுதிகளில் சி.சி.டி.வி., கேமரா பொருத்துவதற்காக வந்துள்ளனர். பிறகு பணி முடிந்தவுடன் டூவீலரில் கமுதி நோக்கி சென்றுள்ளனர். அப்போது முதுகுளத்தூர் -கமுதி ரோடு தூரி பஸ் ஸ்டாப் அருகே பிளாஸ்டிக் பைகள் கிடந்தன. கீழே கிடந்த பிளாஸ்டிக் பைகளை எடுத்து பார்க்கும்போது தங்க நகை இருந்தது தெரியவந்தது. தாங்கள் எடுத்த அந்த நெக்லஸை போலீசிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். அதன்படி நான்கரை பவுன் எடையுடைய அந்த தங்க நெக்லஸை முதுகுளத்தூர் புறக்காவல் நிலையத்தில் டி.எஸ்.பி., சண்முகம் இன்ஸ்பெக்டர் ஜான்சி ராணி முன்னிலையில் ஒப்படைத்தனர்.ஒப்படைத்த செந்தில் குமார், அய்யனாரின் நேர்மையை போலீஸ் அதிகாரிகள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.சாலையில் கிடந்த தங்க நெக்லஸின் உரிமையாளர் யார் என கண்டறிந்து ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

D.Ambujavalli
மார் 11, 2025 06:25

தென் மாவட்டங்களில் கனமழை என்று வானிலை அறிக்கை கூறுவது இத்தகைய நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் பாராட்டுக்கள் நல்ல மனிதர்களே


Anantharaman Srinivasan
மார் 10, 2025 22:58

ஆட்சிக்ககட்டிலில் அமர்ந்து ஊரான் பணத்தை மனசாட்சியின்றி ஆட்டைபோடும் அரசியல்வாதிகள் உலா வரும் நாட்டில், கையில்மேல் கிடைத்த அன்னியர் நகைக்கு ஆசைபடாமல் போலீஸ் வசம் ஒப்படைத்த உள்ளங்களை மனதார வாழ்த்துவோம்..


சின்னசேலம் சிங்காரம்
மார் 10, 2025 22:50

இவர்களுக்காகவும் ஒரு மழை பெய்யட்டும்


Ramesh Sargam
மார் 10, 2025 21:41

தமிழகத்தில் திமுக சாக்கடை ஆட்சியில், இப்படியும் ஒரு சில நல்ல உள்ளம் படைத்த தாமரைகள் மலரத்தான் செய்கிறது. வாழுத்துவோம் அவர்களை.


Premanathan Sambandam
மார் 10, 2025 21:38

தங்கள் நேர்மைக்கு தலை வணங்குகிறோம் வாழ்க வளமுடன்