உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு உற்சாக வரவேற்பு

சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு உற்சாக வரவேற்பு

சென்னை: சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வென்று சாதனை படைத்தார். இதன் மூலம், விஸ்வநாதன் ஆனந்துக்கு அடுத்தபடியாக, உலக சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3mcnilba&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உலக சாம்பியன் பட்டம் வென்ற பிறகு முதல் முறையாக, இன்று (டிச.,16) சென்னை திரும்பிய குகேஷ்க்கு தமிழக அரசு தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் விளையாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். சென்னை கலைவாணர் அங்கத்தில் உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு நாளை (டிச.,17) பாராட்டு விழா நடைபெற உள்ளது. தமிழக அரசு தரப்பில், குகேஷக்கு ரூ.5 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

மகிழ்ச்சி

விமான நிலையத்தில் நிருபர்களுக்கு குகேஷ் அளித்த பேட்டி: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி. டிங் லிரேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உலக சாம்பியன்ஷிப் இறுதிக்கு செல்ல, சென்னை செஸ் ஒலிம்பியாட் உதவியது. கோப்பையை வீட்டிற்கு கொண்டு வந்தது மகிழ்ச்சி. அனைவரின் ஊக்கமும், எனக்கு புத்துணர்ச்சியை தந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Easwar Kamal
டிச 16, 2024 20:16

ஏனப்பா ஆந்திராவிலே நாயுடு பவன் எங்க ஆளு ஜெயச்சடலு டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்கானுவ. நீ என்னடானா சென்னைகு வந்து இறங்கிருக்கிற. இவனுங்க ரெண்டு பேருக்கும் மண்டையில உறைகின்ற மாதிரி சொல்லு சென்னை செஸ் கிளப்பினால்தான் இந்த வெற்றி கிட்டியது. இனம் மொழி எல்லாம் அப்புறம்தான் அதுங்க காதுல ஏறட்டும்.


Apposthalan samlin
டிச 16, 2024 17:01

தமிழக அரசு 5 கோடி கொடுக்கிறது குகேஷ் பரிசு தொகையில் இருந்து 4.6 கோடி கட்ட வேண்டி இருக்கிறது நிர்மலா எப்படி விடும்


ManiK
டிச 16, 2024 17:50

பொய் whatsapp வதந்தியை நம்பாதீஙைக. இதுக்கு முன்னாடி எத்தனையோ இந்தியர்கள் அதிக பரிசு வாங்கிருக்காங்க. Rule is Rule whoever it is but 5Crல 4 5Cr வரி என்பது வீன் வதந்தி.


ஆரூர் ரங்
டிச 16, 2024 19:09

(தெலுங்கருக்கு ஓங்கோல்காரர் உதவியுள்ளார் என்றாலும்) இதற்கெல்லாம் முழு வரி விலக்கு உண்டு.


ஆரூர் ரங்
டிச 16, 2024 19:15

ஹலோ. 1980 வருமான வரி திருத்தச் சட்டத்திலேயே( Clause 17A of Section 10)இதற்கெல்லாம் வரிவிலக்களித்து விட்டார்கள். மீண்டும்மீண்டும் நீங்க உ.பி என்பதை நிரூபிக்க வேண்டாமே.


Subramanian
டிச 16, 2024 16:11

வாழ்த்துகள், பாராட்டுகள்


Bahurudeen Ali Ahamed
டிச 16, 2024 13:23

வாழ்த்துக்கள் தங்க மகனே


Sudhakar
டிச 16, 2024 12:29

வாழ்த்துக்கள் தம்பி


abdul
டிச 16, 2024 12:16

வாழ்த்துக்கள்...


சம்பா
டிச 16, 2024 12:14

அளவுக்கு மீறி ஆட்டம் போடரானுக இது நல்லது அல்ல


Sudhakar
டிச 16, 2024 12:28

என்ன ஆட்டம் போடுறாங்க. வயித்தெரிச்சல் புடிச்சவன்


சமீபத்திய செய்தி