மல்யுத்த போட்டி தமிழக போலீஸ் சாதனை
சென்னை:தேசிய மல்யுத்த போட்டியில், தமிழக போலீசார், மூன்று தங்கம் உட்பட, 11 பதக்கங்களை பெற்று, சாதனை படைத்துஉள்ளனர்.உ.பி., தலைநகர் லக்னோவில், செப்., 9 - 13ம் தேதி வரை, 73வது தேசிய மல்யுத்த போட்டிகள் நடந்தன. இதில், தமிழக போலீசார், 80 பேர் பங்கேற்றனர். இவர்கள் மூன்று தங்கம், நான்கு வெள்ளி, நான்கு வெண்கலம் என, 11 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். தமிழகம் திரும்பியுள்ள இவர்களுக்கு நேற்று, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.