உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெற்றி பெற்றதே நீங்க தானே? பொய் பேசாதீர்கள் என ராகுலுக்கு பட்னவிஸ் பதிலடி

வெற்றி பெற்றதே நீங்க தானே? பொய் பேசாதீர்கள் என ராகுலுக்கு பட்னவிஸ் பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 25 தொகுதிகளில் 8 சதவீதம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டுள்ளதாக ராகுல் கூறுகிறார். அவற்றில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் தான் வெற்றி பெற்றுள்ளன என ராகுலுக்கு முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் குறித்து ராகுல் தொடர்ந்து பொய் பேசி வருவதாக, மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுல் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oe58d276&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது: மஹாராஷ்டிராவில் அவமானகரமான தோல்வியால் உங்கள் வலி நாளுக்கு நாள் அதிகரித்து வருவது உண்மைதான்.மஹாராஷ்டிரா தேர்தலில் குறிப்பிட்ட 25 தொகுதிகளில் 8 சதவீதம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டுள்ளதாக ராகுல் கூறுகிறார். அவற்றில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் தான் வெற்றி பெற்றுள்ளன. இன்னும் எத்தனை காலத்திற்கு தான் ராகுல் இருட்டு அறையை நோக்கி அம்புகளை எய்தப் போகிறார்? ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொது வெளியில் அள்ளி வீசுவதற்கு முன், ராகுல் தமது கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம் விவரங்களை கேட்டுவிட்டு பேசினால் நல்லது என பட்னவிஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sampath
ஜூன் 25, 2025 04:46

ராகுல் காந்தி பாவம். வயசு மட்டும் தான் வளருது . புத்தி கொஞ்சம் கூட வளர மாட்டேங்குது .


தாமரை மலர்கிறது
ஜூன் 24, 2025 22:52

ஜனநாயகம் உள்ளது என்பதற்காக தேசநம்பிக்கையை குலைக்கும் வகையில் தவறாக அவதூறு பேசக்கூடாது. ராகுலுக்கு ரெண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுத்தால், மற்றவர்கள் தேர்தல் கமிஷனை பற்றி வாய்திறக்க பயப்படுவார்கள். மற்றவர்களுக்கு ஒரு பாடமாக ராகுல் திகழ வேண்டும்.


Bhakt
ஜூன் 24, 2025 22:35

சீன கைக்கூலி. தேசத்தை வளரவிடாமல் செய்வதே நோக்கம்.


Ramesh Sargam
ஜூன் 24, 2025 21:46

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொது வெளியில் அள்ளி வீசுவதற்கு முன், ராகுல் தமது கட்சியை சேர்ந்த சசி தரூரிடம் பல உண்மைகளை கேட்டு பேசவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை