உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டெட்டனேட்டருடன் வாலிபர் கைது

டெட்டனேட்டருடன் வாலிபர் கைது

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பூதப்பாண்டியில் வீட்டில் டெட்டனேட்டர்கள் பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பூதப்பாண்டி அருகே அழகிய பாண்டிபுரம் மேலபுதூர் தெருவைச் சேர்ந்தவர் ஷகீன் 29. கஞ்சா வைத்திருந்ததாக இவரை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டையும் போலீசார் திடீர் சோதனையிட்டனர். வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 16 டெட்டனேட்டர்கள், 10 மீட்டர் ஒயர் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !