உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மடப்புரம் கோவில் காவலாளி கொலையில் போலி எப்.ஐ.ஆர்., மீது நம்பிக்கை இல்லை: இ.பி.எஸ்.,

மடப்புரம் கோவில் காவலாளி கொலையில் போலி எப்.ஐ.ஆர்., மீது நம்பிக்கை இல்லை: இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போலீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார். இதற்கிடையே வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அவரது அறிக்கை: திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.இது முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை! ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல். இதனை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும். இந்த நிலையில், அஜித்குமார் உயிரிழந்ததற்கு காரணம் 'வலிப்பு' என FIR பதிவு செய்துள்ளது ஸ்டாலின் அரசின் காவல்துறை.'Deja Vu' எல்லாம் இல்லை. விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது முதல்வர் ஸ்டாலின் எந்த பச்சைப்பொய்யை சட்டசபையில் கூச்சமின்றி சொன்னாரோ, அதே பொய்யை அப்படியே அஜித்குமாருக்கு மீண்டும் சொல்கிறது ஸ்டாலினின் காவல்துறை. நீங்கள் இப்படியெல்லாம் தில்லுமுல்லு செய்வீர்கள் எனத் தெரிந்து தான், எனது அறிவுறுத்தலின்படி, அ.தி.மு.க.,வினர்அனைவரும் JusticeForAjithkumar பதாகைகளை ஏந்தி, நீதிக்கான குரலாக ஒலித்தனர்.'ஆய்வுக் கூட்டம் நடத்துகிறோம்; CBCID-க்கு மாற்றுகிறோம்' என்ற உங்கள் நாடகங்களை சில ஊடகங்கள் நம்பலாம். மக்களும் சரி, நாங்களும் சரி, துளி கூட நம்பவில்லை! முதல்வரின் தறிகெட்ட ஆட்சியில் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர் தமிழக மக்கள்.போலீஸின் போலி FIR மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை CBIக்கு மாற்ற வேண்டும். இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும். வீடியோ ஷூட் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் ஸ்டாலின் அவர்களே? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.சி.பி.ஐ.,க்கு மாற்றம்இந்நிலையில், இன்று ஜூலை 1ம் தேதி மாலை, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Krishna
ஜூலை 01, 2025 16:04

sterilne பிரச்னை நீங்க என்ன சார் பன்னுங்கா......... WEAST FELLOW EPS........


SUBRAMANIAN P
ஜூலை 01, 2025 14:29

எடப்பாடி நீ சுத்த வேஸ்டுயா திமுகவுக்கு பயந்து ரொம்ப பம்முற..


GMM
ஜூலை 01, 2025 11:13

போலீஸ் விசாரணையில் இறந்தால், யார் புலனாய்வு செய்ய வேண்டும் என்பது போலீஸ், நீதிபதி, அரசியல் வாதிகள் விருப்பம் போல் கூடாது. பெற்றோர், குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் விருப்பமாக இருக்க வேண்டும். மத்திய அரசு அல்லது மகாராஷ்டிரா போலீஸ் விசாரிக்க கோரினால் அனுமதிக்க வேண்டும். அதுவரை லாக் ஆப் மரணம் தடுப்பு நடவடிக்கை கடினம்.


skrisnagmailcom
ஜூலை 01, 2025 11:02

என்ன எதிர் கட்சி தலைவரைய்யா நீர் ச்சும்மா அறிக்கை வலியுறேத்தல்னே மக்கள் ப்ரச்சனைகளுக்காக என்ன போராட்டம் செய்தனர் எதிர் கட்சியினர்


Kjp
ஜூலை 01, 2025 12:08

நீங்கள் ஒன்றும் முட்டுக் கொடுக்க வேண்டாம் லாக்கப் மரணத்திற்கு மட்டும் சரியா தவறா என்று கருத்து போடவும்


நாஞ்சில் நாடோடி
ஜூலை 01, 2025 13:32

லாக் அப் மரணம், மக்கள் பிரச்னை அல்லாமல் மாக்கள் பிரச்சனையா ?


சமீபத்திய செய்தி