உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது; திருநெல்வேலியில் பயங்கரம்

நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது; திருநெல்வேலியில் பயங்கரம்

திருநெல்வேலி: திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் கீழ நத்தத்தை சேர்ந்த, சண்முகவேல் மகன் மாயாண்டியை 4 பேர் கும்பல் வெட்டிப் படுகொலை செய்து விட்டு, தப்பி ஓடினர். பின்னர், 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.திருநெல்வேலி மாவட்டம் கீழ நத்தத்தை சேர்ந்தவர் ராஜா மணி. இவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி, இவர் கீழ நத்தத்தில் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த போது அதே ஊரை சேர்ந்த கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில், கீழ நத்தத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் மாயாண்டி, இசக்கி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று (டிச.,20) அந்த வழக்கு விசாரணைக்காக, திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் கீழ நத்தத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் மாயாண்டி (38 ) என்பவர் வந்திருந்தார். அவரை காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். அவர் இறந்ததை உறுதி செய்த பின் நால்வரும் காரில் தப்பினர். உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.இந்த வழக்கில், ராமகிருஷ்ணன், சிவா, மனோ ராஜ், தங்க மகேஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து அரிவாள், துப்பாக்கி மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Gurusamy
டிச 20, 2024 20:24

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூப்பர் எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது


என்றும் இந்தியன்
டிச 20, 2024 17:06

திராவிட அறிவிலி மடியல் அரசு என்று இந்த அரசு எவ்வளவுமுறை தான் தன்னை தரம் தாழ்த்திக்கொள்ளும் 1-தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது - அண்ணாமலை 2-தி.மு.க. ஆட்சி என்றாலே ஊழல் தலைவிரித்து ஆடும் என்பதற்கேற்ப, ஊழல், கமிஷன், வசூல் . அந்த வரிசையில், தற்போது தரமற்ற நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவற்றை கொள்முதல் செய்ய தி.மு.க அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக தகவல் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்


அப்பாவி
டிச 20, 2024 17:01

போங்க... ஆந்திராவில் ஒரு பொணத்தையே பார்சலில் அனுப்பி மிரட்டல் வுடுக்குறாங்களாம். போய் பேசுங்க.


sri
டிச 20, 2024 16:19

இது தனிப்பட்ட குடும்பங்களுக்கு இடையேயான தகரார். இது சட்ட ஒழுங்கு பிரச்சினை அல்ல. இதற்கு அரசு பொறுப்பு ஏற்காது என்று மந்திரி ஸ்டேட்மெண்ட் விடுவார் பாருங்க


chandrasekar
டிச 20, 2024 16:10

இப்படிப்பட்ட சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை தான் தேவை. பல்பிடுங்கி பல்பீர்சிங்கின் பதவியை பிடுங்கி ஓரங்கட்டிவிட்டது திராவிட மாடல். அப்படி இருக்கும் போது யார் தான் நடவடிக்கை எடுக்க முன்வருவர். வெட்டியதும், செத்ததும் ரவுடிதானே என கண்டுகொள்ளாமல் விடுவர். ஆனால் இவற்றை தடுக்க வேண்டிய காவல்துறை என்ன செய்கிறது... எப்படி கண்காணிக்காமல் விடுகிறது என்பதெல்லாம், ஒரு காலத்தில் ஸ்காட்லாண்ட் யார்டாக இருந்த தமிழக காவல் துறைக்கே வெளிச்சம்...


இராம தாசன்
டிச 20, 2024 20:45

அந்த காவல் ஏவல் துறை - யாராவது சோசியல் மீடியாவில் விடியல் ஆட்சியை பற்றி கருத்து பதிவிட்டால் அவர்களை கைது செய்வதில் மும்முரமாக இருக்கிறது


Krishnan
டிச 20, 2024 16:09

ஆக , தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது


Mohdgilani
டிச 20, 2024 15:51

என்னுடைய நண்பன் கூறுவது போல் தமிழ் மக்கள் கூமுட்டைகள் தான். எப்படி தான் தீய விற்கு வோட்டு போடுகிறார்களா. சாராயம் கஞ்சா கொலை கொள்ளை கமிஷன் ஊளல் இது தான். தீய மூ க என்றாலே இது தான்


என்றும் இந்தியன்
டிச 20, 2024 17:07

தமிழ் மக்கள் அல்ல டாஸ்மாக்கானாட்டு குடிகார மாக்கள்


மோகன்
டிச 20, 2024 15:40

ஸ்டாலின் சொன்ன இரும்பு கரம் எங்கே? துருப்பிடித்து விட்டதோ?


nsathasivan
டிச 20, 2024 15:34

இவங்க பாராளுமன்றத்தில் தேவையில்லாத பிரச்சினைகளுக்கு கூக்குரல் எழுப்பி இங்குள்ள தமிழ்நாட்டில் நடக்கும் கஞ்சா கடத்தல்,கொலை கொள்ளைகளை மூடி மறைக்கின்றனர்.


S.SRINIVASAN
டிச 20, 2024 14:16

இந்த கையாலாகாத தனத்தை பார்க்க தானே மக்கள் 2021 ல் வாக்களித்தனர். 2026ல் கடந்த ஐந்து வருடத்தில் கற்ற பாடத்தை கையில் எடுத்து ஆட்சி மாற்றத்தை உறுதியாக தமிழகத்தில் ஏற்படுத்துவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை