உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வருத்தம்

பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வருத்தம்

சென்னை: '' மொபைல் போன் யுகத்தில் இளைஞர்கள், சில பெரியவர்கள், பாரத நாட்டின் சம்பிரதாயம், கலாசாரத்தின் அருமை பெரிமை தெரியாமல் உள்ளனர்,'' என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி பேசிய வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.அந்த வீடியோவில் ரஜினி கூறியுள்ளதாவது: மொபைல் போன் யுகத்தில் நமது இளைஞர்கள், சில பெரியவர்கள் பாரத நாட்டின் சம்பிரதாயம், கலாச்சாரம் அருமை பெருமை தெரியாமல் உள்ளனர். தங்களது கலாச்சாரம் பாரம்பரியத்தில் நிம்மதி, சந்தோஷம் கிடைக்கவில்லை என்று கூறி மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியாவை நோக்கி வருகின்றனர். இங்கு தான் நிம்மதி, சந்தோஷம் கிடைக்கிறது என்கின்றனர். தியானம், யோகா, இயற்கையான வாழ்க்கையை நோக்கி வருகின்றனர். நமது கலாசாரம், அருமை பெருமைகளை இளைஞர்களிடம் சேர்க்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு ரஜினி பேசி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

முத்துராமன்
மே 02, 2025 09:37

இவர் யாரு மக்களுக்கு அறிவுரை வழங்க


J.Isaac
மே 01, 2025 14:18

கலாச்சார அழிவுக்கு முக்கிய காரணமே சினிமா தானே


கடலோடி
மே 01, 2025 07:16

தன்னுடைய மகளை கலாசாரம் தெரியாமல் வளர்த்ததை பற்றி வருத்தப்பட்டு பேசிருக்கார்


pmsamy
மே 01, 2025 06:14

சிஸ்டம் சரியில்ல தலைவா நீ சொல்றது சரிதான்


Matt P
மே 01, 2025 00:26

சொன்னது ஸ்டாலின் என்ற இளைஞ்சருக்கும் சேர்த்து தானே


Matt P
மே 01, 2025 00:25

உதயநிதி போன்றவர்களுக்கு தெரியாது என்பதை மறைமுகமாக சொல்கிறாரோ.


மூர்க்கன்
ஏப் 30, 2025 23:24

கடைசில ஆளும் வர்க்கத்திற்கு கூலி ...


Bhakt
ஏப் 30, 2025 23:21

சிகரெட்டை தூக்கி போட்டு வாயில கவ்வுறது இந்திய கலாச்சாரம்???


Sivagiri
ஏப் 30, 2025 23:06

16 வயது மயிலை விரட்டியது , சிகரெட்டை தூக்கி போட்டு லகப்புக்குன்னு வாயில புடிக்கிறது , இதெல்லாம் இப்போ தடை பண்ணியாச்சு . .


Sivagiri
ஏப் 30, 2025 23:03

கொஞ்சம் அப்டி சூடு கண்ணு . . . நீரு இளைஞரா இருந்தப்போ , எந்த கலாசாரத்தில் மூழுகிட்டு இருந்தாரு ? . . . எல்லாம் மறந்திட்டாரு . .. . அட்வைஸ்கள் இலவசம் . . .