உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசுக்கு எதிராக பேசுபவர்களை முடக்குகிறார்கள்: சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

அரசுக்கு எதிராக பேசுபவர்களை முடக்குகிறார்கள்: சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: '' திமுக அரசுக்கு எதிராக பேசுபவர்களை காவல்துறை மூலம் முடக்குகிறார்கள்,'' என யுடியூபர் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி உள்ளார்.திருச்சியில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆஜரான பிறகு யுடியூபர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டி: என் மீது ஏற்கனவே 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 15 வழக்குகள் விசாரணையிலும், 20 வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் யூடியூபில் மீடியா சேனல் நடத்துகிறேன். தினமும் அரசியல் நிகழ்ச்சி நடத்த வேண்டும்.இன்று திருச்சி, அடுத்த வாரம் மதுரை, அதற்கு அடுத்த வாரம் கோவை, அதற்கு அடுத்த வாரம் கரூர் என தமிழகம் முழுவதும் ஒவ்வொரு நீதிமன்றத்துக்கு அழைத்தால் என்னுடைய மீடியாவை நடத்த முடியாது என்பதாலும், எனது ஊடகத்தை தொடர்ந்து நடத்துவதால், திமுக அரசு அம்பலப்படுத்தப்படுகிறது என்பதாலும் இப்படி செய்கின்றனர். காவல்துறையை பயன்படுத்தி என்னை பேச விடாமல் தடுக்கவும், முடக்கவும் செய்கின்றனர்.இன்னும் இரண்டு நாட்களில் திருச்சிக்கு விஜய் வர உள்ளார். அவருக்கு கை காட்டக்கூடாது. உட்காரக்கூடாது. எழுந்து நிற்கக்கூடாது என எத்தனை நிபந்தனை விதிக்கிறார்கள் என்பதை பார்க்கிறீர்கள். அவர் அரசியல் கட்சித் தலைவர். அவர் பிரசாரம் செய்ய வேண்டும் என்றால், பிரசாரம் செய்யட்டும். ஆனால், காவல்துறையை பயன்படுத்தி அவரை எப்படி முடக்குகிறார்களோ அதுபோல என்னையையும் காவல்துறையை பயன்படுத்தி முடக்குகிறார்கள். அரசுக்கு எதிராக பேசுபவர்கள், குரல் கொடுப்பவர்கள் அனைவரையும் காவல்துறையை பயன்படுத்தி முடக்குவதை பார்க்கிறோம்.அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் செல்லும் இடம் எல்லாம் ஆம்புலன்சை விட்டு அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்டதாக இபிஎஸ் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. மதுரை மாநாட்டில் ரசிகர் ஒருவரை பவுன்சர் தூக்கிப் போட்டதற்காக விஜய் மீது வழக்குப் போட்டுள்ளனர். காவல்துறையை பயன்படுத்தி எதிர்க்குரல், எதிர்க்கட்சிகள் அத்தனை பேரையும் தடுக்க வேண்டும் என்பதற்காக அரசு செயல்படுகிறது. காவல்துறை அதற்கு ஏற்றார் போல் திமுகவின் கூலிப்படையாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

xyzabc
செப் 12, 2025 05:36

ஹிட்லர் ஆட்சியில் வேற என்ன எதிர்பார்க்க முடியும்.?


Kasimani Baskaran
செப் 12, 2025 04:08

தீம்க்காவினர் தங்களது விசுவாசிகளை எதிரி போல அனுப்பி நாடகம் போடுவதில் சூரர்கள். அதில் முதல் நிலை டவுக்கர். அடுத்தது பாஜகவிலிருந்து வெளியே அனுப்பட்ட நபர். உண்மையோடு பொய்யை கலந்து தீம்க்காவுக்கும் மறுபடியும் ஒரு சான்ஸ் கொடுக்க வேண்டும் என்று சொல்லுமளவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வார்கள். இதில் அந்த திராவிடம் தெளித்து திருமாவை வைத்து போட்ட நாடகம்தான் ஆஸ்கருக்கு பரிந்துரைக்குமளவுக்கு வில்லத்தனமானது.


mohana sundaram
செப் 11, 2025 21:22

இவர் ஏதோ இது புதியது போல கூறுகிறார். கடந்த மூன்று நான்கு வருடமாக இது எல்லோருக்கும் தெரிந்தது தானே. புச்சா ஏதாவது இருந்தா சொல்லுங்க.


Palanisamy Sekar
செப் 11, 2025 20:58

அண்ணாமலைதான் இப்போது இவரின் டார்கெட். அனுதினமும் அண்ணாமலையை பற்றி பிரச்சாரம் செய்வதுதான் இவருக்கு கொடுக்கப்பட்ட கூலி. நல்ல வசதி வாய்ப்புடன் இருப்பதால் பணம் கொடுத்தால் போதும் சகட்டுமேனிக்கு அப்படியே உண்மையாக இருபப்து போல பேசுவது இவருக்கு கைவந்த கலை . ஒவ்வொரு காணொளியிலும் தினமும் அண்ணாமலையை பற்றி சொல்லாமல் நகர்வதே கிடையாது. அப்படிப்பட்டவருக்கு இப்படித்தான் கர்மா வேலை செய்திடும்.


pakalavan
செப் 11, 2025 20:51

இதுவரைக்கும் தவறான கருத்தை பரப்பி 16 முறை நீதிமன்றத்தில் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்திருக்கார்,


Roy
செப் 11, 2025 20:46

வாயை வாடகைக்கு விடும் ஜென்மம், சிலுக்கு சங்கர்


pakalavan
செப் 11, 2025 20:25

இவன் பொய்காரன், பித்தலாட்டம் பேசும் டபுல் ஏஜன்டு காசு குடுத்தா


திகழ்ஓவியன்
செப் 11, 2025 19:58

அண்ணாமலையே இன்றைய நிலையில் DMK 47 % வோட்டு உள்ளது அசைக்க முடிய இடத்தில இருக்கு என்று சொல்லி,கூடிய விரைவில் பிஜேபி விட்டு வந்து DMK சேருவார் போல தெரிகிறது , இதில் வாய் வெச்சி பிழைக்கும் கூலி பாய்ஸ் நீ எல்லாம் என்ன


Natarajan Ramanathan
செப் 11, 2025 21:33

விரைவில் பிஜேபி கட்சியில் சேரலாம் .


ஓவியா விஜய்
செப் 12, 2025 07:29

பீ ஜே பி யில் சேர்ந்தால் மத்திய அமைச்சர், கவர்னர், துணை ஜனாதிபதி ஆகலாம். தேய மூ கா வில் சேர்ந்தால் உன்னைப் போல 200 போஸ்டர் ஓட்டும் வேலை செய்யலாம்


புதிய வீடியோ