தென்கொரியாவில் விமானம் தீப்பிடித்தது : 176 பயணிகள் உயிர்தப்பினர்
சீயோல் : பயணிகள் விமானம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் தென்கொரியா விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 176 பயணிகள் உயிர்தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.தென்கொரியாவின் தென் கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது மிகப்பெரிய நகரமான ஜிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் இன்று ஏர்புசான் ஏர்பஸ் ஏ 321 விமானம் 176 பயணிகளுடன் ஹாங்காங் புறப்படதயாரானது. அப்போது விமானத்தின் வால் பகுதியில் தீ பிடித்ததில் தீ மளமளவென விமானம் முழுதும் பரவியது.உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டதால் 176 பயணிகளும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். இச்சம்பவத்தில் ஒருவர் காயமடந்ததாக கூறப்படுகிறது. தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் விமானத்தின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.