உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போலிப் பொருட்களைத் தடுக்கும் ஒப்பந்தம்: 8 நாடுகள் கையெழுத்து

போலிப் பொருட்களைத் தடுக்கும் ஒப்பந்தம்: 8 நாடுகள் கையெழுத்து

டோக்கியோ: உலகளவில், போலி மற்றும் திருட்டுப் பொருட்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில், ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட எட்டு நாடுகள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. உலகளவில் பிரபலமான பொருட்களைப் போல போலியாக உற்பத்தி செய்வது, திரைப்படம் மற்றும் இசைத் துறையில் திருட்டு சி.டி.,க்கள் தயாரித்து உலகளவில் பரப்புவது ஆகியவற்றால், சம்பந்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதோடு, இப் பொருட்கள் பரவும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில், 2008 முதல், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இதன் இறுதிக்கட்டமாக, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, மொராக்கோ, நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய எட்டு நாடுகள், போலி மற்றும் திருட்டு பொருட்களை தடுக்கும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதில், ஐரோப்பிய யூனியன், மெக்சிகோ மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் சேர விருப்பம் தெரிவித்துள்ளன. எனினும், அந்நாடுகளின் பார்லிமென்ட்டுகளில் அதற்குரிய மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது. அதேநேரம், போலி மற்றும் திருட்டுப் பொருட்கள் மிக அதிகளவில் உற்பத்தியாகும் சீனா, இந்த ஒப்பந்தத்தில் சேர்ந்து கொள்ளவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ