உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் சூறாவளி:மேடை சரிந்து 4 பேர் பலி

அமெரிக்காவில் சூறாவளி:மேடை சரிந்து 4 பேர் பலி

சிகாகோ:அமெரிக்காவின் இண்டியானா பொலிஸ் நகரில், கடும் சூறாவளி காரணமாக, கண்காட்சி அரங்கில் போடப்பட்டிருந்த மேடை சரிந்ததில், நான்கு பேர் பலியாயினர்.இண்டியானா பொலிஸ் நகரில், கண்காட்சி நடக்கிறது. அதில், பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு, 'சுகர்லேண்ட்' என்ற இசைக் குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பிரபல பாடகர் சாரா பெர்லிஸ், இசை நிகழ்ச்சியில் பங்கேற்றதால், ஆயிரக்கணக்கான மக்கள் கண்காட்சிக்கு வந்திருந்தனர்.இசை நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களில், 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இதில், பிரமாண்ட மேடை முற்றிலும் சரிந்து விழுந்தது. இசை நிகழ்ச்சி பார்க்க வந்த கூட்டத்தினர் கலைந்து செல்லும் முன்னரே, இந்த விபத்து நடந்ததால், நான்கு பேர் பலியாயினர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ