உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேச வன்முறை; 105 பேர் பலி: 778 மாணவர்கள் இந்தியா வந்தனர்

வங்கதேச வன்முறை; 105 பேர் பலி: 778 மாணவர்கள் இந்தியா வந்தனர்

டாக்கா: வங்கதேசத்தில் நடந்து வரும் போராட்டத்தால், இதுவரை 105 பேர் உயிரிழந்தனர். அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால், 778 இந்திய மாணவர்கள் தாயகம் நோக்கி திரும்பினர்.கடந்த 1971ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின், வங்கதேசம் தனி நாடாக பிரிந்தது. இந்த போரில் உயிர் தியாகம் செய்தோர் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளுக்கு அந்நாட்டு அரசு வேலையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2018ல் நடந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து இந்த இடஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்தது. இதை எதிர்த்து வங்கதேச மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்து வரும் மோதலில், இதுவரை 105 பேர் உயிரிழந்தனர்.

பள்ளி, கல்லூரிகள் மூடல்

அனைத்து பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் மூடப்பட்டன. மாணவர்கள், விடுதிகளை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவுவதை அடுத்து, அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் டாக்காவில் உள்ள இந்திய துாதரகம் செய்து வருகிறது.தற்போது, கிடைக்கக்கூடிய வழிகளை பயன்படுத்தி, இந்திய மாணவர்கள் வீடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய மாணவர்கள் சுமார் 4 ஆயிரம் பேரை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

வங்கதேசத்திலுள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று, அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில், தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் கட்டணமில்லா உதவி கட்டணமில்லா உதவி எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.+ 91 1800 309 3793, + 91 80 6900 9900 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Indhuindian
ஜூலை 21, 2024 06:12

சென்னையில் இருந்து அரசு போக்குவரத்து சொகுசு பேருந்துகள் டாக்காவுக்கு அனுப்பி வைத்து அணைத்து தமிஷர்களையும் மீட்க வேண்டும். ஆனா அந்த பேருந்துகள் கொறஞ்சது டாக்காவுலேந்து இந்திய எல்லய தாண்டறவரைக்குமாவது நடுவுலே நிக்கமா வொடுமான்னு பாத்துக்கங்க இல்லேன்னா இங்கே தெருவோரதுலே நிக்கற மாதிரி அங்கே நிந்துடுச்சுன்னா இன்னும் நிலைமை மோசமாயிடும் பேருந்து நிந்ததுக்கு ஒன்றிய அரசுமேல பஷி போடக்கூடாது


KRISHNAN R
ஜூலை 20, 2024 12:53

.. இந்தியாவை விட்டு பங்களாதேஷில்..... என்ன சிறப்பு கல்வி இருக்கு


Anand
ஜூலை 20, 2024 12:24

இன்னும் சில நாட்களில் மேற்குவங்கம், தமிழ்நாடு போன்ற இடங்களில் இதுபோல இவர்களின் அமைதி போராட்டம் நடக்கும். ஒரே ஒரு வித்தியாசம்


Sivagiri
ஜூலை 20, 2024 12:14

இந்தியர்களை மட்டும் உள்ளே விடுங்கள் . . - - ஆற்று நீர்வழி கடல் நீர்வழி-ன்னு எல்லா திசையிலும் உள்ள புகுந்துட்டு , இங்க வந்து செக்குலர் பேசிட்டு இருப்பாய்ங்க . . .


KRISHNAN R
ஜூலை 20, 2024 12:48

ஏற்கனவே வந்தாச்சு ஆதார் அட்டை இருக்கும்.... .... இடங்களை வென்று விட்டாச்சு


என்றும் இந்தியன்
ஜூலை 20, 2024 17:27

1.5 கோடி வங்க தேசத்தவர்கள் மம்தா வந்த பிறகு மேற்கு வங்காளத்தில் ஆதார் கார்டு ரேஷன் கார்டு தேர்தல் ஐடி கார்டு இருக்கின்றது - 15 நாட்கள் முன்பு அந்த செய்தி


Kumar Kumzi
ஜூலை 20, 2024 11:43

ஹாஹாஹா மாணவர்களோ இவனுங்க குண்டு தயாரிக்கும் முறையை படிக்க போயிருப்பாங்க தயவுசெய்து இந்தியாவுக்குள் அனுமதிக்காதீர்கள்


Svs Yaadum oore
ஜூலை 20, 2024 11:25

சமூக நீதி விடியல் திராவிடர்கள் இது பற்றி உடனடியாக கலந்தாலோசித்து மத சார்பின்மையாக இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையை பாதுகாக்க வேண்டும் .. .விடியல் அரசு உடனடியாக தனி விமானத்தில் பங்களாதேஷ் மற்றும் மேற்கு வங்கம் சென்று கொல்கத்தாவில் கூட்டணி கட்சி மேடத்திடம் இதை வலியுறுத்த வேண்டும் . ..உலகெங்கும் விடியல் சமூக நீதி அடிப்படை உரிமையை ஒரு நாளும் விட்டு கொடுக்காது ....


Rajalakshmi
ஜூலை 20, 2024 11:22

பாலஸ்தீனியன் முஸ்லிம்கள் afghanis பங்களாதேஷி african iranian maldivian முஸ்லிம்கள் என inimicals இந்திய செகுலர் துவேஷி அரசு கட்டியணைத்து வரவேற்கும் .


Rajalakshmi
ஜூலை 20, 2024 11:18

முதல் கட்ட corona பரவல் போதுதான் தெரிய வந்தது.......... கூட்டம் கூட்டமாக பங்களாதேஷ் என இதர நாடுகளுக்கு சென்றிருப்பது.


Rajalakshmi
ஜூலை 20, 2024 11:13

இந்திய மாணவர்கள் என்றால் ? எந்த மதத்தினர் ?


RAJ
ஜூலை 20, 2024 11:08

Shame to study in bangaladesh. West bengal wakeup... drama queen mamta is sleeping with snoring.


மேலும் செய்திகள்