உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சூடானில் ஓராண்டில் 200 குழந்தைகள் பாலியல் பலாத்காரம்

சூடானில் ஓராண்டில் 200 குழந்தைகள் பாலியல் பலாத்காரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கெய்ரோ: சூடான் நாட்டில், 2024ம் ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை, 200 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், கடந்த 2023 ஏப்ரலில், ராணுவத்திற்கும், துணை ராணுவப்படையான ஆர்.எஸ்.எப்.,க்கும் இடையே மோதல் வெடித்தது. கடந்த ஆண்டு துவக்கத்தில் மோதல் அதிகரித்தது. இதில், 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 14 லட்சம் மக்கள், தங்கள் இருப்பிடத்தை விட்டு விரட்டப்பட்டுள்ளனர்.'யுனிசெப்' எனும், ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகளின் அவசர கால நிதியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:கடந்த 2024க்கு பின், ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப்படையினரால், பொதுமக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மக்களிடம் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, 221 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 30 சதவீதம் பேர் சிறுவர்கள். அவர்களில், 16 வயது முதல், 4 - 5 வயது சிறுவர்களும் அடக்கம்.இருதரப்பு வீரர்களின் அட்டூழியங்கள் அதிகரித்து விட்டன. பாலியல் வன்முறைகள், கட்டாய குழந்தை திருமணம் போன்றவற்றால் குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அட்டூழியங்களால், 61,800 குழந்தைகள், உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.யுனிசெப் அமைப்பின் செயல் இயக்குநர் காதரின் ரஸ்ஸல் கூறுகையில், ''பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பாலியல் வன்முறைகள், போரின் ஒரு தந்திரமாக சூடானில் பின்பற்றப்படுகிறது. இதன் வாயிலாக, போரின்போது குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்ற சர்வதேச சட்டங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ram
மார் 05, 2025 11:55

அமைதி ஆட்களின் ??????


Barakat Ali
மார் 05, 2025 10:10

சூடான் திராவிடன் ஆளும் மாநிலத்தைப்போல சுடுகாடு ஆவுதா?? அல்லது திராவிடன் ஆளும் மாநிலம் சூடானைப்போல சுடுகாடு ஆவுதா??


Shekar
மார் 05, 2025 09:38

எதிலும் நாங்கள்தான் முதல்


Nallavan
மார் 05, 2025 07:24

சீமானை அங்கு அனுப்பிவைத்தால் பிரச்னை தீர்த்துவிடும்


Shekar
மார் 05, 2025 11:51

தம்பி ஞானசேகரன், தம்பியோட சார் இவர்கள் போதுமே.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 05, 2025 06:10

தமிழகத்தில் போக்சோ செய்திகள் தினம் தினம் புது புது வடிவில் வருகின்றது. போக்சோ குற்றங்கள் ஏதாவது ஒரு வகையில் நடக்கிறது. ஒரு மாநிலத்தில் இப்படி என்றால் இந்தியா முழுவதும் நடக்கும் குற்றங்கள் எவ்வளவு இருக்கும். இது தான் அதிர்ச்சி தரும் தகவல்


Kasimani Baskaran
மார் 05, 2025 05:21

எங்கெல்லாம் இஸ்லாமிய ஆட்சி இருக்கிறதோ அங்கு பெண்கள் நல்ல விதமாக நடத்தப்படுவது இல்லை. விதிவிலக்குகள் இருக்கலாம் - ஆனால் அவை ஒரு பொழுதும் விதியாகிவிடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை