உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யா-உக்ரைன் சிறையிலிருந்து போர்க்கைதிகள் 206 பேர் விடுவிப்பு

ரஷ்யா-உக்ரைன் சிறையிலிருந்து போர்க்கைதிகள் 206 பேர் விடுவிப்பு

மாஸ்கோ: ரஷ்யா -உக்ரைன் போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக இரு தரப்பிலும் 206 பேர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சிறையிலிருந்து விடுவித்திருப்பது 3வது முறையாகும்.இது குறித்து உக்ரைன் அதிபர் விலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளதாவது:ரஷ்யா சிறையிலிருந்து உக்ரைனை சேர்ந்த 82 ராணுவ வீரர்கள் மற்றும் 21 அதிகாரிகள் விடுவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.கடந்த ஆகஸ்ட் மாதம் சிறைபிடிக்கப்பட்டிருந்த ரஷ்ய ராணுவ வீரர்களில் 103 பேரை உக்ரைன் விடுவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் இருதரப்பு போர் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புவதாக ரஷ்ய தரப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை