உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேபாள பஸ் விபத்து 27 இந்தியர்கள் உயிரிழப்பு

நேபாள பஸ் விபத்து 27 இந்தியர்கள் உயிரிழப்பு

காத்மாண்டு, நேபாளத்தில், நம் நாட்டின் பதிவெண் கொண்ட சுற்றுலா பஸ், ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், 27 இந்தியர்கள் உயிரிழந்தனர்.உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் இருந்து, நம் அண்டை நாடான நேபாளத்துக்கு, 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பஸ்சில் சுற்றுலா சென்றனர். கஸ்கி மாவட்டத்தின் பொக்காரா என்ற இடத்திலிருந்து, தலைநகர் காத்மாண்டு நோக்கி, சுற்றுலா பஸ்சில் அவர்கள் நேற்று சென்றனர்.இந்நிலையில், தனாஹுன் மாவட்டத்தில் உள்ள ஐனா பஹாரா என்ற நெடுஞ்சாலையில் பஸ் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மார்ஷியண்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குஉள்ளானது. இந்த விபத்தில், 27 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mohan
ஆக 25, 2024 22:15

இந்தியர்கள் வெகு தாமதமாகத்தான் சில விஷயங்களை புரிந்து கொள்கின்றனர். அங்கே ஸ்வீடனோ, வேறு தேசமோ, அவர்கள் தங்கள் குடிமக்களுக்கே முக்கியத்துவமும், அதிக சம்பளம், பதவி உயர்வு போன்றவற்றில் முன்னுரிமையும் தருவதனாலும், குடும்பத்துடன் இருந்தால் சேமிப்பதற்கு இயலாத நிலை ஆகியன உள்ளது. இவற்றை தாண்டிச் செல்ல அதிக படிப்பும், அதிக திறமையுமே தேவை எனும் போது, திரும்பி வருவதே சிறந்தது.


புதிய வீடியோ