உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டி தூக்கினார் 60 வயது மூதாட்டி

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டி தூக்கினார் 60 வயது மூதாட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்று அதிக வயதில் பட்டத்தை வென்றவர் என்ற சாதனை படைத்துள்ளார்.1952-ம் ஆண்டு முதல் மிஸ் யுனிவர்ஸ் ( பிரபஞ்ச அழகி ) போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியில் கலந்து கொள்வோரின் வயது வரம்பு 18 முதல் 28 எனவும், திருமணம் ஆகி இருக்க கூடாது எனவும் விதி முறைகள் வகுக்கப்பட்டு இருந்தது. இதனிடையே கடந்த ஆண்டு முதல் 18 வயது முதல் 73 வயது வரை போட்டியி்ல் கலந்து கொள்ளலாம் என வயதில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. இதனையடுத்து அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்தவரும் வழக்கறிஞருமான அலெஜாண்ட்ரா மரிசா ரோட்ரிக்ஸ் என்பவர் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.மேலும் அதிக வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற முதல்பெண் என்ற பெருமையையும் பெற்றார். கடந்த 24 ம் தேதி நடைபெற்ற போட்டியில் 18 வயது முதல் 73 வயது வரை உள்ளோர் போட்டியிட்டனர். மொத்தம் 34 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வான நிலையில் அலெஜாண்ட்ரா மரிசா ரோட்ரிக்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஏப் 27, 2024 21:44

சோனியா காந்தி, ப்ரியங்கா காந்தி, மமதா, கனிமொழி போன்றவர்கள் தேர்தல் கலத்தில் மும்முரமாக இருந்ததால் அழகி போட்டியில் கலந்துகொள்ளவில்லை தேர்தல் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், அவர்களில் யாராவது ஒருவருக்கு அழகி பட்டம் கிடைத்திருக்கும்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி