வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்திய நாட்டில் படுக்கையில் இருந்துகொண்டே பதவிக்கும் ஆசைப்படுகிறார்கள்..
இங்கேயும் ஒருவர் இருக்கிறார்
பாரீஸ்: பிரான்ஸ் பிரதமராக 73 வயது மைக்கேல்பர்னியார் நியமிக்கப்பட்டார். அவரை அதிபர் இமானுவேல் மேக்ரான். முன்மொழிந்தார்.பிரான்ஸ் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன், கடந்த ஜனவரியில் பதவி விலகினார். அவருக்கு பதிலாக 34 வயதான கேப்ரியல் அட்டல் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். இவர் பிரான்சின் இளம் வயது பிரதமர் என பெருமை பெற்றார்.பிரான்ஸ் அதிபராக இருப்பவர் இமானுவேல் மேக்ரான். இவர் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வந்தன. இதனை சரி செய்ய முதன் வேலையாக பிரதமராக இருந்த எலிசபெத் போர்னை நீக்கிவிட்டு, 34 வயது கேப்ரியல் அட்டல் என்பவரை பிரதமராக நியமித்தார். இதனால் பிரான்ஸ் வரலாற்றில் முதன்முறையாக இளம் வயது பிரதமர் என பாராட்டப்பட்டார். தற்போது அவர் ஓரினச்சேர்க்கையாளர் என தெரியவந்துள்ளது.இந்நிலையில் திடீரென 73 வயது மைக்கேல் பர்னியர் என்பவரை பிரதமராக இமானுவேல் மேக்ரான், அறிவித்துள்ளார். இவர் பல்வேறு துறை அமைச்சராகவும், ஐரோப்பின் யூனியன் அமைப்பில் முக்கிய ஆலோசகராகவும் இருந்து அனுபவம் பெற்றவர் என்பதால் பிரதமராக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.பிரான்ஸ் அரசியல் வராலாற்றில் முதன்முறையாக வயதான பிரதமர் அரசை திறம்பட நிர்வாகிக்க முடியுமா , சீர்திருத்தங்களை கொண்டு வரமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் அரசியல் விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய நாட்டில் படுக்கையில் இருந்துகொண்டே பதவிக்கும் ஆசைப்படுகிறார்கள்..
இங்கேயும் ஒருவர் இருக்கிறார்