உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா மீது நம்பிக்கை உள்ளது அமெரிக்கா திட்டவட்ட அறிவிப்பு

இந்தியா மீது நம்பிக்கை உள்ளது அமெரிக்கா திட்டவட்ட அறிவிப்பு

வாஷிங்டன் : 'ரஷ்யாவுடன் நட்பில் இருந்தாலும், இந்தியா எங்களுடைய சிறந்த நட்பு நாடு தான். அதன் மீது நம்பிக்கை உள்ளது. உக்ரைன் விவகாரத்தில் தீர்வு ஏற்பட இந்தியாவின் பங்கு முக்கியமாக இருக்கும்' என, அமெரிக்கா கூறிஉள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட மேற்காசிய நாடுகள், ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன.மேலும், ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது.ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்காத நிலையில், உக்ரைனில் அமைதி திரும்புவதை வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் நட்பு பாராட்டினார். போரால் எந்தத் தீர்வும் காண முடியாது; பேச்சின் வாயிலாக அமைதி ஏற்படுத்த முடியும் என, மோடி வலியுறுத்தினார்.இது குறித்து, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பேட் ரைடர் கூறியுள்ளதாவது:இந்தியா - ரஷ்யா இடையே நீண்ட காலமாக நட்பு உள்ளது. அமெரிக்காவின் பார்வையின்படி, இந்தியா நமக்கு மிகவும் முக்கியமான நட்பு நாடு. ரஷ்யாவுடன் அவர்கள் பேசினாலும், இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.சமீபத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியையும் மோடி சந்தித்து பேசினார். அப்போது உக்ரைனில் அமைதி திரும்ப தேவையான அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பதாக கூறியுள்ளார். உக்ரைனில் அமைதி திரும்புவது குறித்து ரஷ்யாவிலும், மோடி பேசியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.''இந்தியா - ரஷ்யா இடையேயான நட்பு தொடர்பான நம் கவலைகளை இந்தியாவுக்கு தெரிவித்துள்ளோம். நம் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை,'' என, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Swaminathan L
ஜூலை 11, 2024 12:25

வேறு வழியில்லை. இன்றைய சூழ்நிலையில், இந்தியாவுடனான வர்த்தகம் வளர, இதைவிட இந்தியாவைத் தூக்கி வைத்துப் பேசியே ஆக வேண்டும்.


ரகுகுலன்
ஜூலை 11, 2024 11:52

இன்னும் நிறைய அபாச்சி, குபாச்டி, துப்பாக்கியெல்லாம் விக்கணுமே


subramanian
ஜூலை 11, 2024 10:22

ரஷ்யா நட்பு நீண்ட வரலாறு கொண்டது. மாறி வரும் புதிய உலக நிலையில் பாரதத்தை வல்லரசாக வேண்டும் என்று மோடிக்கு உந்துதல் உள்ளது. அமெரிக்கா, ரஷியா நட்பு இதற்கு உதவியாக இருக்கும்.


Barakat Ali
ஜூலை 11, 2024 10:16

அப்போ நாங்களும் அமெரிக்காவை நம்பிட்டோம் ......


Kalyanaraman
ஜூலை 11, 2024 07:17

மோடியும், வெளியுறவுத் துறையும் கில்லாடி தான்யா. ஒரு புறம் ரஷ்யாவுடனும் மறுபுறம் அமெரிக்காவுடனும் வெற்றிகரமாக நல்லுறவு பாராட்டுவது என்பது சாதாரண விஷயம் அல்ல - சாதனை. உலக நாடுகள் எதுவும் செய்யத் துணியாத துணிச்சலான, அதிசயத்தக்க செயல். பாராட்டுக்கள்.


கல்கத்தாமகேஷ்
ஜூலை 11, 2024 11:54

என்ன பெரிய கில்லாடி. இங்கே இலங்கை இந்தியா, சீனா ரெண்டு பேர் காசிலேயும்.மஞ்சள் குளிக்கிறதை விடவா?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை