உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தூதரக அதிகாரிகள் விவகாரம்; வெளியேற்றும் எண்ணமே இல்லை என்கிறது அமெரிக்கா!

தூதரக அதிகாரிகள் விவகாரம்; வெளியேற்றும் எண்ணமே இல்லை என்கிறது அமெரிக்கா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இந்திய தூதர் உள்ளிட்ட அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்தாண்டு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு இந்தியா தான் காரணம் என்று கனடா பிரதமர் நேரடியாக குற்றம்சாட்டியதால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவில் உள்ள இந்திய தூதர் உட்பட 6 பேரை இந்தியா திரும்பப் பெற்றது. அதோடு, இந்தியாவில் இருந்து கனடா தூதர்களும் வெளியேற்றப்பட்டனர். இதனிடையே, அமெரிக்காவில் காலிஸ்தான் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுனை, கொலை செய்ய முயற்சித்ததாக, இந்தியாவின் ரா அமைப்பின் முன்னாள் அதிகாரியான விகாஷ் யாதவை அமெரிக்கா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. அவர் மீது பணத்திற்காக கொலை செய்தல், பணமோசடி உள்ளிட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கெலை வழக்கில் இந்தியா - கனடா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.இதன் தொடர்ச்சியாக, கனடாவை போல, அமெரிக்காவும் இந்திய தூதராக அதிகாரிகளை வெளியேற்ற முயற்சித்ததாக தகவல் வெளியாகியது. இது இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை; அப்படி ஒரு எண்ணமே இல்லை என அமெரிக்காவின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ravi Kulasekaran
நவ 04, 2024 16:38

அடுத்த ஜனாதிபதி டிராம்ப் வந்தால் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு வரும் இரண்டு நாட்களில் தெரியும் கமலா ஹாரிஸ் வந்தால் நண்பன் ராஷ்யா இருக்கிறான் யாம் இருக்க பயம் ஏன் இந்தியா ராஷ்யா சீனா உலகத்தை ஆள் முடியும்


நிக்கோல்தாம்சன்
அக் 31, 2024 04:16

அமெரிக்காவுடன் எல்லாவித தொடர்புகளையும் துண்டித்தாள் என்னாகும் ?


Senthil
அக் 31, 2024 08:52

இன்று கொஞ்சம் பேருக்காவது கிடைத்துள்ள ஓரளவு பணம் கிடைக்காமல் அவர்களும் பிச்சை எடுக்க வேண்டிய நிலை உருவாகும்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 30, 2024 23:35

கால்லே விழுந்து மன்னிப்பு கேட்டுட்டாய்ங்க போல.


செல்வேந்திரன்,அரியலூர்
அக் 31, 2024 07:58

ஏலே துலுக்கா போலி பெயரில் இருந்து கொண்டு தாய்நாட்டை கேவலப்படுத்த நினைத்தால் உன்னுடைய வாலை ஒட்ட நறுக்கி விடுவோம்.மரியாதையா ஒழுக்கமா இருந்தா உனக்கு இங்கே வசிக்க அனுமதி இல்லாவிட்டால் பாகிஸ்தானுக்கு விரட்டியடிக்கப் படுவாய் ஜாக்கிரதை.


visu
அக் 30, 2024 20:57

அவனவன் அமெரிக்கா குடியுரிமை பெறவே ஆயிரம் தகுதி கேட்டு வெரட்டுறாங்க இங்க தீவிரவாதிக்கு இரெண்டு நாட்டு குடியுரிமை கொடுக்குறாங்க


கைப்புள்ள
அக் 30, 2024 20:55

ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்


sankaranarayanan
அக் 30, 2024 17:26

அமெரிக்காவில் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுனை, தங்கள் நாட்டில் அவனுக்கு அடைக்கலம் கொடுத்து அமெரிக்கா ஆதரிக்கிறது இது முற்றிலும் தவறு பின் லேடனை அயல்நாட்டிலினுள் அவர்களுக்கே தெரியாமல் உள்ளே புகுந்து அவனை சுட்டு பிடித்தாற்போல் இந்த தீவிரவாத பண்ணுன்னுவை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் அவனுக்கு அமெரிக்காவில் அடைக்கலாமோ ஆதரவோ கொடுத்து இந்தியாவிற்கு எதிராக அவன் செயலை அழிக்க வேண்டும் அதுதான் ஜனநாயகம்


karthik
அக் 30, 2024 16:51

கனடாவின் பப்பு தான் இந்த ருடோ


Barakat Ali
அக் 30, 2024 16:20

பாஜக வும் காங்கிரஸ் போல ஸலாம் அடித்து நடந்துகொண்டால் பிரச்னை இருக்காது .....


Senthoora
அக் 30, 2024 16:52

தவறு, பாஜகவும் இப்போ திராவிட மடலை பின்பற்றுகிறது.


புதிய வீடியோ