உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 14வது குழந்தைக்கு தந்தையானார் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்

14வது குழந்தைக்கு தந்தையானார் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெக்சாஸ்: அமெரிக்க தொழிலதிபரும், அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பருமான எலான் மஸ்க், 14வது குழந்தைக்கு தந்தையானதை நேற்று உறுதிப்படுத்தினார்.'எக்ஸ்' சமூக வலைதளம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம் ஆகியவற்றை நடத்தி வருபவர், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் அதிபர் எலான் மஸ்க், 53. இவர் போர்ப்ஸ் இதழின் 2025ம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலில் 39 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் நம்பர் 1 இடத்தில் உள்ளார்.எலான் மஸ்கிற்கும், அவரது முதல் மனைவி யான ஜஸ்டின் வில்சனுக்கும் 2002ல் ஒரு மகன் பிறந்து இறந்தான். அதன்பின் இத்தம்பதிக்கு இரு பிரசவத்தில் இரட்டையர்கள் மற்றும் மூவர் என ஐந்து குழந்தைகள் பிறந்தன. 2008ல் எலான் மஸ்க் - ஜஸ்டின் வில்சன் பிரிந்தனர்.அதன்பின், இசைஅமைப்பாளர் கிரிம்ஸ் என்பவரை மணந்தார், மஸ்க். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவரையும் பிரிந்த மஸ்க் தற்போது ஷிவான் ஜில்லிஸ் என்ற பெண்ணுடன் வசித்து வருகிறார்.மஸ்க் - ஷிவான் தம்பதிக்கு ஸ்ட்ரைடர், அசூர், அர்காடியா என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நான்காவதாக மகன் பிறந்துள்ளதாகவும், அந்த குழந்தைக்கு ஷெல்டன் லைகர்கஸ் என பெயர் வைத்துள்ளதாகவும், மஸ்கின் மனைவி எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டார். இதற்கிடையே, பிரபல எழுத்தாளரும், சமூக வலைதள பிரபலமுமான ஆஸ்லே செயின்ட் கிளேர், ஐந்து மாதங்களுக்கு முன் எலான் மஸ்கின் குழந்தையை பெற்றெடுத்ததாக அறிவித்தார். இதை எலான் மஸ்க் மறுக்கவில்லை. அதன்படி தற்போது 14வது குழந்தைக்கு மஸ்க் தந்தையாகி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

வல்லவன்
மார் 02, 2025 14:12

அங்கு அது சர்வசாதாரணம். மக்கள் take it easy ஆக எடுத்துக்கொள்ளும்பொழுது ஒரு பிரச்சனையும் இல்லை. US மக்கள் தொகை இப்போதுதான் 30 கோடியை எட்டி உள்ளது


Sampath Kumar
மார் 02, 2025 13:00

இருக்கு அடிச்சு விடுறாரு போல முடி உள்ளவன் அல்லி முடிகின்றன அம்புதான் விஷயம் ஹி ஹி


Balaa
மார் 02, 2025 12:19

14ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க.


Barakat Ali
மார் 02, 2025 10:52

ஏதாவது பத்திரிகைக்காரன் எடக்கு மொடக்கா எழுதுனான்னா / கேள்வி கேட்டான்னா ....... என் மகள் / மகன் அல்ல ..... என் இணைவியின் மகள் ...... ன்னு ஒரே போடா போட்டுருங்க மஸ்க் ......


ஜான் குணசேகரன்
மார் 02, 2025 10:40

எலன் மாஸ்க் அனைவரும் அறிய பல தொழில்கள் வியாபாரங்கள் செய்து பணக்காரர் ஆகி பெரிய குடும்பத்தை உருவாக்கி வருகிறார். திராவிட குடும்பம் என்ன தொழில் செய்கின்றனர் என்றே தெரியவில்லை. ஆனால் பெரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள்.


Barakat Ali
மார் 02, 2025 10:12

கலக்கு சித்தப்பு நீயி ......


Naga Subramanian
மார் 02, 2025 09:19

இணை துணை மனை என்று பேசாமல், இது எனது குழந்தையே இல்லை என்று சொல்லாமல் ஊரறிய தனது குழந்தைகளை பற்றி வெளியிடும் திராவிட சித்தாந்தமில்லாத ஒரு கெத்தான மனிதரே எலன் மாஸ்க்.


Kasimani Baskaran
மார் 02, 2025 07:40

இன்னும் 10வது பெற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிகு: இதே மனைவி நீடிப்பார் என்று உறுதி சொல்ல முடியாது.


பெரிய ராசு
மார் 02, 2025 07:37

இவன் ஒரு ஆளு இவனை கண்டு ட்ரன்பு நடுங்கிறன்


sankaranarayanan
மார் 02, 2025 07:37

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் பாதினாரும் பெற்று பெரு வாழ்வு வாழட்டும் என்று வாழ்த்துவோமாக இன்னம் பெற்றால் பதினாறு ஆகிவிடும்