உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெளிநாட்டு கப்பல்களுக்கு தடை; விலக்கி கொள்கிறது இலங்கை

வெளிநாட்டு கப்பல்களுக்கு தடை; விலக்கி கொள்கிறது இலங்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு : தங்கள் துறைமுகங்களில் வெளிநாட்டு கப்பல்களை நிறுத்துவதற்கு விதித்துள்ள தடையை, அடுத்த ஆண்டில் நீக்க உள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.நம் அண்டை நாடான இலங்கையின் துறைமுகத்தில், சீனாவின் ஆய்வு கப்பல்கள் கடந்த சில ஆண்டுகளில் பலமுறை நிறுத்தப்பட்டன. ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்தக் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், நம் நாட்டை உளவு பார்ப்பதற்காகவே, அந்தக் கப்பல்கள் நிறுத்தப்படுவதாக, மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தது.இதைத் தொடர்ந்து, தன் துறைமுகங்களில் வெளிநாட்டுக் கப்பல்கள் நிறுத்துவதற்கு தடை விதித்து, கடந்த ஜனவரியில் இலங்கை அறிவித்தது. ஆனால், சீனாவின் மற்றொரு ஆய்வு கப்பல் நிறுத்துவதற்கு சில மாதங்களுக்கு முன் இலங்கை அனுமதி அளித்தது.இந்நிலையில், இந்தத் தடையை அடுத்தாண்டில் முழுதுமாக நீக்கப் போவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானுக்கு சென்றுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இதை தெரிவித்ததாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ