உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஐஸ்லாந்தின் 2-வது பெண் அதிபராக தொழில் அதிபர் தேர்வு

ஐஸ்லாந்தின் 2-வது பெண் அதிபராக தொழில் அதிபர் தேர்வு

ரெக்ஜாவிக்: ஐஸ்லாந்து நாட்டின் புதிய மற்றும் 2-வது பெண் அதிபராக தொழில்அதிபரான ஹல்லா தோமஸ் டோட்டிர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஐஸ்லாந்து நாட்டில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பெண் தொழில் அதிபரான ஹல்லா டோமஸ் டோட்டிர் மற்றும் முன்னாள் பிரதமர் கேத்ரின் ஐாகோப்ஸ்டோட்டிர் போட்டியிட்டனர்.55 வயதான டோமஸ் டோட்டிர் 34.3 சதவீத வாக்குகளும்,48 வயதான ஜாகோப்ஸ்டோட்டிர் 25.5 சதவீத வாக்குகளும் பெற்றனர். இதனையடுத்து ஹல்லா தோமஸ் டோட்டிர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஐஸ்லாந்து நாட்டின் இரண்டாவது பெண் அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். முன்னதாக கடந்த 1980 ம் ஆண்டில் விக்டிஸ் பின்னபோகாடோட்டிர் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Prabakaran VK
ஜூன் 02, 2024 20:30

தமிழ்நாட்டுல ஒருத்தர் சிறைக்கு போகாமல் வெளியிலேயே இருக்கிறார். ஐபிஎல் மேட்ச் பார்க்கிறார். அதனால் எந்த உடல்நலக்குறைவும் இல்லாமல் பொழுதை கழிக்கிறார். கேள்வி கேட்க யாரும் இல்லை.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி