உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய விரோத அமெரிக்க பெண் எம்.பி.யுடன் ராகுல் சந்திப்பால் சர்ச்சை

இந்திய விரோத அமெரிக்க பெண் எம்.பி.யுடன் ராகுல் சந்திப்பால் சர்ச்சை

வாஷிங்டன்: அமெரிக்க சென்றுள்ள லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல், இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுகொண்ட இலன் ஒமர் என்ற பாக்., ஆதரவு அமெரிக்க பெண் எம்.பி.யை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ராகுலுக்கு எதிராக மீண்டும் கண்டனம் எழுந்துள்ளது.லோக்சபா எதிர்க்கட்சித்தலைவரான ராகுல், நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை கடுமையாக விமர்சித்தும், மதம், ஜாதி, மொழி குறித்த சர்ச்சை பேச்சும் பேசினார். ராகுலின் பேச்சு பிரிவினையை தூண்டும் விதமாக உள்ளதாக பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.இந்நிலையில், அமெரிக்காவின் முக்கிய பெண் எம்.பி.க்களை ராகுல் சந்தித்தார் இதன் புகைப்படம் வெளியானது. இதனை பா.ஜ.,வின் அமித் மாலவியா ‛‛எக்ஸ்'' வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தில் இந்தியாவிற்கு எதிராக செயல்படும் இலன் ஒமர் என்ற பெண் எம்.பி.,உள்ளார்.இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் சேசாத் பொன்னவாலா ‛எக்ஸ் ' வலைதளத்தில் கூறியது, புகைப்படத்தில் அமெரிக்கா பெண் எம்.பி., இலன் ஒமர் உள்ளார். இவர் பாகிஸ்தான் ஆதரவு பெற்றவர், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் , இந்தியாவிற்கு எதிராக விஷம பிரசாரம் செய்து வருகிறார். காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு தொடர்பாக அமெரிக்கா பார்லிமென்ட்டில் தீர்மானமும் கொண்டு வந்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு பல முறை சென்றுள்ளார். ராகுல் ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்லும் போது இந்தியா எதிர்ப்பாளராக மாறுவது ஏன் ? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

SIVAN
செப் 12, 2024 14:05

இனம் இனத்தோடு சேரும். இந்த பெரிய பையனோட அப்பா பெரு ஷாஹீத், இவருடைய ஜாதி சாதாத் என்று ஒரு காங்கிரஸ் நிர்வாகி குறிப்பிட்டதாக ஞாபகம்.


subramanian
செப் 12, 2024 13:00

ராகுல் இந்தியாவுக்கு, இந்துக்களுக்கு விரோதி.


Ramesh Sargam
செப் 12, 2024 12:46

இந்திய நாட்டுக்கு களங்கம் ஏட்படுத்தவே ராகுல் இப்படி அமெரிக்கா மற்றும் பல நாடுகளுக்கு செல்கிறார். தீவிரவாதிகளை கூட நாம் ஓரளவு நம்பலாம். ஆனால் இதுபோன்ற தீவிர தேசதுரோகிகளை ஒருக்காலும் நம்பவே கூடாது.


பேசும் தமிழன்
செப் 12, 2024 08:47

அவர் எப்போதும் தேச விரோத கும்பலுக்கு ஆதரவான நிலையை தான் எடுத்து வந்து இருக்கிறார்..... இதிலே புதிதாக என்ன இருக்கிறது என்று ???


பாபு
செப் 12, 2024 06:46

இந்தியாவின் முதல் எதிரி இந்த பப்புதான்


Kasimani Baskaran
செப் 12, 2024 05:56

வின்சியாரின் எல்லை மீறிய பேச்சுக்கள் பலரை முகம் சுழிக்க வைத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. பழம்பெருமை பேசித்திரியும் காங்கிரசுக்கு உருப்படியான ஒரு தலைவனைக்கூட தேர்வு செய்ய முடியவில்லை என்பது அந்தக்கட்சி முக்கால் வாசி அழித்து விட்டதற்கான அத்தாட்சி.


Venkitusamy KR
செப் 12, 2024 09:45

நான் காங்கிரஸில் இருக்கும் பொழுது இவனை இவன் அதான் பப்பு புகழ்ந்து கொண்டு இருந்தேன் அதற்காக இப்பொழுது அந்த அயோக்கியனை புகழ்ந்ததுக்கு மிக மிக வருத்தப்படுகிறேன்


Raj
செப் 12, 2024 02:27

இந்தியாவில் இருந்து கொண்டு அமெரிக்கா போய் அவர்களிடம் தாய் நாட்டை பற்றி குறை கூறும் துரோகி, இவனையும் இந்திய மக்கள் எம் பி ஆக தேர்ந்தெடுகிறார்கள். வெட்கக்கேடு.


Kumar Kumzi
செப் 12, 2024 00:46

இந்த இத்தாலியனின் இந்திய குடியுரிமையை பறித்து விட்டு இத்தாலிக்கு நாடு கடத்துங்கள்


Nachiar
செப் 11, 2024 23:30

உடன் பிறந்த சகோதரனை திருமணம் முடித்த இல்ஹன் உமர். இது ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டும் அரசு கண்டு கொள்ளவில்லை.


Balamurugan
செப் 11, 2024 23:26

நாட்டுக்கு எதிராக பேசுகிறான் எப்படி இவனை இந்தியாவில் சுதந்திரமாக நடமாடுகிறான். இந்திய அரசியல் அமைப்பை நினைத்தால் கேவலமாக இருக்கிறது. ஒரு சாதாரண இந்திய பிரஜை இவனை போல பேசிவிட்டு நாட்டில் நிம்மதியாக நடமாட முடியுமா? இவனையெல்லாம் தேசவிரோத வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.


புதிய வீடியோ