உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப்பை ஆதரிக்க மாதம் ரூ.375.80 கோடியை அள்ளி கொடுக்கும் எலான் மஸ்க்

டிரம்ப்பை ஆதரிக்க மாதம் ரூ.375.80 கோடியை அள்ளி கொடுக்கும் எலான் மஸ்க்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு தேர்தல் நிதியாக ரூ.375.80 கோடியை எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கொடுக்க உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கவுள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் (வயது 81), போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 78) களம் காண்கிறார். அதிபர் தேர்தலில், எலான் மஸ்க் நடுநிலை வகிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், சில தினங்களுக்கு முன், டிரம்பை தாமஸ் மாத்யூ குரூக்ஸ் (வயது 20) என்ற நபர் சுட்டார். இதன் பிறகு, தேர்தலில் டிரம்பை ஆதரிப்பதாக எலான் மஸ்க் அறிவித்தார்.டிரம்பிற்கு, 4.5 கோடி டாலர் ( இந்திய மதிப்பு படி ரூ.375.80 கோடி) தேர்தல் நிதியாக எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கொடுக்க உள்ளார். டிரம்பிற்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் நிதி குறித்து, அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், '' டிரம்பிற்கு ரூ.375.80 கோடியை எலான் மஸ்க் கொடுக்க உள்ளார். தொழிலதிபர்கள் ஷான் மாகுவேர், ஜான் ஹெரிங் ஆகியோர் தலா 5 லட்சம் டாலர்கள், கேமரூன் மற்றும் டைலர் விங்க்லெவோஸ் தலா 2.5 லட்சம் டாலர்கள் நன்கொடை வழங்கி உள்ளனர்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
ஜூலை 16, 2024 15:46

பரவாயில்லையே இவ்வளவு வெட்ட வெளிச்சமாக இவ்வளவு காசு கொடுத்தேன்???நம்மூர்லே திராவிட மாடல் இதையெல்லாம் வெளியே சொல்லவே மாட்டார்கள்


ஆரூர் ரங்
ஜூலை 16, 2024 17:57

சொன்னார் ஆற்காட்டார். தனியார் மருத்துவக் கல்லூரிக்கு உதவி அதற்கு பதிலாக கட்சிக்கு பல கோடி தேர்தல் நிதியை வசூலித்த உண்மையை ஆற்காட்டார் ஒப்புதல் வாக்குமூலம் போல கூறினாரே.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை