உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / என்னா அடி… என்னா அடி: கூகுளை அடித்துத் துவைத்து துாக்கில் தொங்க விட்டது அமெரிக்க கோர்ட்!

என்னா அடி… என்னா அடி: கூகுளை அடித்துத் துவைத்து துாக்கில் தொங்க விட்டது அமெரிக்க கோர்ட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'கூகுள் தேடுபொறியானது போட்டிகளை தடுக்கவும், ஏகபோக உரிமையைப் பேணுவதற்கும் சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளது,' என அமெரிக்க நீதிபதி அமித் மேத்தா தெரிவித்தார். ஆன்லைன் தேடலில், கூகுள் நிறுவனம் 90 சதவீதத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைக்க, சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறது என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, கடந்த 2020ல் கூகுள் மீது அமெரிக்க நீதித்துறை வழக்குத் தொடர்ந்தது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முக்கிய வழக்குகளில் இதுவும் ஒன்றாகும். இந்த வழக்கு ஓராண்டுக்கும் மேலாக, நிலுவையில் இருந்தது. அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அமெரிக்க நீதிபதி அமித் மேத்தா தீர்ப்பு அளித்தார்.

சட்டவிரோதம்!

அவர் அளித்த 277 பக்கம் கொண்ட, தீர்ப்பில் கூறியிருப்பதாவது: கூகுள் தேடுபொறியானது போட்டிகளை தடுக்கவும், ஏகபோக உரிமையைப் பேணுவதற்கும் சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம், தேடல் சேவையில் ப்ரவுசரில் 90 சதவீதத்தையும், மொபைல்களில் 94.9 சதவீதத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஸ்மார்ட் போன்களிலும், பிரவுசர்களிலும் தனது தேடுபொறி, 'டிபால்ட்' ஆக நிறுவப்படுவதற்கு கோடிக்கணக்கான ரூபாய் அள்ளிக்கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கு தொடர்வோம்!

இதனால் கூகுள் மற்றும் அதன் தலைமை நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்திற்கு பின்னடைவு ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாக, கூகுளின் தலைமை நிறுவனமான ஆல்பாபெட் தெரிவித்துள்ளது.

வரலாற்று வெற்றி

அமெரிக்கா அரசு வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லண்ட் கூறியதாவது: அமெரிக்க மக்களுக்கு ஒரு வரலாற்று வெற்றி. எத்தகைய செல்வாக்கு கொண்டதாக இருந்தாலும், எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும், எந்த நிறுவனமும் சட்டத்திற்கு மேலானது இல்லை. கூகுள் தனது ஆதிக்கத்தை தக்க வைத்து கொள்ள அதிக பணம் செலவிட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

NATARAJAN K
ஆக 06, 2024 18:33

மெரிக் அமெரிக்கா இப்படி கூகுளை போல் மற்ற நாட்டு விஷயங்களில் தலையிடுவது என்ன பேர்... என்று சொல்வாரா?


Rengaraj
ஆக 06, 2024 15:03

தொழில்நுட்பம் என்பது எப்போதும் மாறிக்கொண்டே இருப்பது. தொழில்நுட்ப உலகில் நானே எல்லாம், எதேச்சதிகாரம் என்பது நிரந்தரம் கிடையாது . கூகுளை நாம் அவ்வாறு ஒரு குறுகிய எண்ணத்தில் சொல்வது ஒருவிதத்தில் நமது அறியாமை. காலமாற்றத்திற்கேற்பவும் , தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஏற்பவும் கூகுள் தன்னைத்தானே செப்பனிட்டுக் கொண்டு முன்னேறிக்கொண்டு வருகிறது. இன்று அதன் அசுரர் வளர்ச்சியை அதன் போட்டி நிறுவனங்கள் தாங்கிக்கொள்ளமுடியாத காரணத்தால் இவ்வாறு வழக்குகள் தொடுத்து வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கின்றன என்றும் எடுத்துகொள்ளலாம். கூகுளை வேண்டாம் என்று சொல்லி நீங்கள் வேறு ஒரு பிரௌசரை உபயோகிப்பதை கூகுள் தடுக்காது. தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை இணையத்தின் மூலம் யார் வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம்.கொடுக்கின்றன. அதை முறையாக தேடுவதற்கு எந்த ஒரு பிரௌசரையும் பயன்படுத்தலாம். தொழில்நுட்பத்தில் ஒரு புலிப்பாய்ச்சலாக கூகுள் சென்றுகொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறையை மனதில் வைத்து தொழில் நடத்தும் எவரும் கையாளும் உத்தியைத்தான் கூகுளும் செய்கிறது. எல்லோருக்கும் இலவசமாக ஜீ மெயில் கணக்கை தருகிறது. அதை கட்டாயம் உபயோகிக்கவேண்டும் என்று யாரும் சொல்வதில்லை.யூ டியூப் வீடியோ என்பதை ஒருவருக்கு வருமானம் தரும் தொழிலாக மாற்றியதன் மூலம் அநேகம் பேர் அதை பயன்படுத்துவதை எவ்வாறு குற்றம் சொல்லமுடியும். இதெல்லாம் வியாபார அபிவிருத்தியின் மற்றுமொரு அம்சம். ஏன் இந்த தொழிலை அதானியோ அல்லது அம்பானியோ , டாடாவோ செய்யலாமே கூகுள் தடுக்கிறதா ?


வல்லவன்
ஆக 06, 2024 14:20

சத்ததையே காணோம். கடைசிவரைக்கும் தீர்ப்பு என்னன்னே சொல்லியே


Sivagiri
ஆக 06, 2024 13:11

இதெல்லாம் வெளிய சொல்றது - - உள்ளுக்குள்ள , ஏ எப்பா , இவ்வளவு செலவு பண்றீல , இங்கிட்டு ஒரு லம்ப் அமௌன்ட்-ஐ தள்ளீட்டீனா , அப்டியே பிளேட்டை மாதீருவோம் , இல்ல , பிளாட்டை உன்பக்கம் கவுதீருவோம் . . என்ன சொல்ற , ? டீலா நோ டீலா ? , சீக்கிரம் யோசிச்சு சொல்லு . . .


Ramesh Sargam
ஆக 06, 2024 13:08

தமிழகத்தில் திமுக குடும்பத்தினரின் ஆதரவில் செயல்படும் பல நிறுவனங்கள், குறிப்பாக G-Square, San Academy, Sun TV, மற்றும் சினிமா தயாரிக்கும் நிறுவனங்கள் போன்ற கோல்மால்புரம் குடும்ப நிறுவனங்களுக்கும் இந்தநிலை வரவேண்டும்.


ஆரூர் ரங்
ஆக 06, 2024 12:21

உலகம் முழுவதும் தனது அதிகார மேலாதிக்கத்தை திணிக்கும் அமெரிக்க அரசே கூகுள் ஏகபோக மேலாதிக்கம் செய்கிறது என குற்றம்சாட்டுவது வேடிக்கை. .


ஆரூர் ரங்
ஆக 06, 2024 12:18

கூகிளின் நிறுவனர்களில் ஒருவர் தமிழரான கவிதார்க் ஸ்ரீராம். தற்போதைய தலைவரும் தமிழர். என்ன பிரச்னைன்னா அவர்களின் சாதிப் பின்புலம் திராவிஷ கொத்தடிமைகளை கண்டபடி கருத்துப் போட வைக்கிறது. ஆஃப்டரால் 200 ரூபாய்க்காக .


Velan Iyengaar
ஆக 06, 2024 14:30

உனக்கு மாதக்கூலியா?? அரிசி பருப்பா தருவார்களா இல்லை கேழ்வரகு தருவார்களா ?? இல்லை ....


பெரிய ராசு
ஆக 07, 2024 22:37

இல்லை ... கறியாக தருவார்கள் அடிமையே


Sampath Kumar
ஆக 06, 2024 11:26

அடித்து துவைத்து தொங்க விட வெண்டிக்காய் இல்லை இதை நிர்வகிப்பது ஒரு இந்தியர் அதுவும் தமிழர் இதனை ஏத்தாது வாதாடியவரும் இந்தியர் தான் இதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கு நம்ம ஊரில் பொது துறை என்பதை ஏது பொறுக்கி துறை போல சித்தரித்து கண்ட பேர்வழிக்கு எல்லாம் தூக்கி கொடுத்த இந்த அரசை கண்டிக்க துப்புக்கேட்ட திராணி அற்ற நீதி மன்றங்கள் மற்றும் ஊடகங்கள் நிறைந்த போட்ட பய ஊரை பூச்சு என்ன செய்ய இவன் மானம் காற்றில் பார்ப்பது விட்டு அடுத்தவன் கோவணம் பறக்குறதை வேடிக்கை பார்க்கும் வேகம் கேட்ட கேடு கேட்ட கூட்டம் உள்ளவரை இந்த நாடு உறுப்பிட வாய்ப்பு இல்லை


PR Makudeswaran
ஆக 06, 2024 11:24

நம் தமிழ்நாட்டில் மேல் சாதி பாவம் கீழ் சாதியும் பாவம். அரசியல் சாதி ஒன்று தான் ஆளுமையில் கோலோச்சுகிறது


xyzabc
ஆக 06, 2024 10:57

கூகுளை விடியல் கையில் கொடுத்தால் என்ன நடக்கும் ? நல்ல வேலை.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி