வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தீவிரவாத, பயங்கரவாத அமைப்புக்களை வாழவிட்டால் உலகுக்கு என்றும் நிம்மதி கிடையாது. ஆனால் பல நாடுகள் இவர்களை மக்களின் விரோதிகளாக பார்க்காமல் காவலர்களாக பார்ப்பது துரதிஷ்ட வசமானது.
பெய்ரூட் : ஹமாஸ் அமைப்பிற்கு புதிய தலைவராக யாஹ்யா சின்வார் நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே கடந்த 11 மாதங்களாக போர் நடந்து வருகிறது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, ஈரான், லெபனான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் காசா பகுதி மற்றும் மேற்கு கரை ஆகியவை அடங்கிய பாலஸ்தீனம் தனி நாடு அந்தஸ்து கேட்டு, பாலஸ்தீனியர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், காசா பகுதியை, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2007ல் நிர்வகித்து வருகிறது.கடந்தாண்டு அக்., 7ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், 1,200 பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர, 250க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும், பாலஸ்தீனத்தின் முன்னாள் பிரதமருமான இஸ்மாயில் ஹானியா, ஈரானின் டெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.தற்போது ஹமாஸ் அமைப்புக்கு தலைமை யார் என அறிவிக்கப்படாத நிலையில் நேற்று ஹமாஸ் அமைப்பின் புதியதலைவராக யாஹ்யா சின்வார் நியமிக்கப்பட்டார்.இவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஹமாஸ் அமைப்பின் தலைவர்களில் ஒருவராக செயல்பட்டார். தற்போது இஸ்மாயில் ஹானியாவிற்கு பதிலாக புதிய தலைவராக இருப்பார் என கூறப்படுகிறது.
தீவிரவாத, பயங்கரவாத அமைப்புக்களை வாழவிட்டால் உலகுக்கு என்றும் நிம்மதி கிடையாது. ஆனால் பல நாடுகள் இவர்களை மக்களின் விரோதிகளாக பார்க்காமல் காவலர்களாக பார்ப்பது துரதிஷ்ட வசமானது.