உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நானே பொறுப்பு... ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்த வழக்கில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் வாக்குமூலம்

நானே பொறுப்பு... ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்த வழக்கில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் வாக்குமூலம்

ரோட்டர்டாம்: போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். தென் கிழக்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில் அதிபராக இருப்பது பெர்டினன்ட் மார்கோஸ் ஜூனியர். கடந்த 2022ம் ஆண்டில், டியுடெர்ட்டியை வீழ்த்தி, மார்கோஸ் அதிபரானார். மணிலாவின் முன்னாள் மேயராக இருந்த போது, பிலிப்பைன்ஸ் நாட்டில் புழக்கத்தில் இருந்த சட்டவிரோத போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க முற்பட்ட டியுடெர்ட், அதற்காக மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.பலரை மொத்தமாக கொன்று குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்களை, அவரே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய, நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட், முன்னாள் அதிபர் டியுடெர்ட்டியை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்தது.அதன்படி நேற்று முன்தினம் (மார்ச் 11), ரோட்ரிகோ டியுடெர்ட், ஹாங்காங்கில் இருந்து மணிலா சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கியதும், மணிலா போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின் அவர், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.சர்வதேச கோர்ட்டுக்கு அவர் அழைத்துச் செல்லப்படும் போது, அவரது ஆதரவாளர்கள் திரண்டு நின்று, அவரை விடுவிக்கும்படி கோஷங்களை எழுப்பினர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க சர்வதேச குற்றவியல் கோர்ட் உத்தரவிட்டது. இதனிடையே, தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு பேசும் வீடியோவை அவரது ஆலோசகர் பேஸ்புக் பகிர்ந்துள்ளார். அதில், 'நான் தான் நம் சட்டம் மற்றும் ராணுவத்தை வழிநடத்தினேன். உங்களை பாதுகாப்பேன் என்று கூறினேன், இதற்கான அனைத்துப் பொறுப்பையும் நானே ஏற்கிறேன்,' எனக் கூறியுள்ளார். தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால், அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Sridhar
மார் 13, 2025 13:56

போதை கும்பல் எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்குது? உலக கோர்ட்டே அதன் கைலதான் இருக்கும்போல? பாவம் நல்ல மனுஷன் நல்ல விசயத்தை தைரியமாக செய்தார். அதை நான்தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்ளும் நேர்மையும் பண்பும் உள்ள மனிதராக இருக்கிறார்.


Senthoora
மார் 13, 2025 15:04

இந்திய அரசியல்வாதிகள் எதனை பேருக்கு இருக்கு.


m.arunachalam
மார் 13, 2025 11:45

அவர் செய்த நல்ல காரியங்களுக்காக பாராட்டுவோம் . அவரை கைது செய்தது தவறு .


Kanns
மார் 13, 2025 11:16

Falsely Twisted News by Cheap News Hungry Media. ICC has become Agents of Power Misusers MegaLooters & Various Mafias Incl Drugs. SHAME. SACK & PUNISH All Concerned


Haja Kuthubdeen
மார் 13, 2025 10:42

போதைப்பொருள்கடத்தல்காரர்கள் விற்பனை செய்தவர்களைதானே கொன்றார்....அதென்ன சர்வதேச நீதிமன்றம்....


gayathri
மார் 13, 2025 10:31

இருநூறு அப்ளை செய்வது எப்படி என்று கருத்து எழுதுபவர்கள் சற்று விளக்கவும். நானும் அப்ளை செய்ய வேண்டும்.


vbs manian
மார் 13, 2025 10:09

இவர் செய்தது கொஞ்சம் அளவுக்கு மிஞ்சியதாக இருக்கலாம். ஆனால் அடிப்படையில் நல்லதை செய்திருக்கிறார்.


naranam
மார் 13, 2025 10:05

அது என்ன சர்வதேச நீதிமன்றம்? அவர்கள் பாச்சா இரான் ரஷ்யா அதிபர்களிடம் பலிக்குமா? முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபர் போதைப் பொருட்கள் கடத்துபவர்களையும் புழங்கி களையும் தானே கொன்றார்! அதிலென்ன தவறு கண்டார்கள்!


சந்திரசேகர்
மார் 13, 2025 10:03

போதை மருந்து விற்கும் கும்பலை கூப்பிட்டு அன்பாக பேசி அவர்களை திருத்தி இருக்க வேண்டும்.அவர்களும் இவர் சொன்னவுடன் திருந்தி இருப்பார்கள்


gayathri
மார் 13, 2025 10:29

இதுதான் உண்மை.


Senthoora
மார் 13, 2025 15:03

ஆமா மயிலே, மயிலே என்றால் இறகுபோடுமாம். appadiyaa


Rajah
மார் 13, 2025 09:59

இங்கு மன்னர் ஆட்சி நீடிக்க போதை பொருள் கடத்தல் மன்னர்களின் உதவி தேவைப்படுகின்றது. அவர்களை பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்துகின்றதே தவிர மக்களுக்கான நல்லாட்சியில் அக்கறை கொள்வதில்லை. பிலிப்பைன்ஸ் நாட்டில் 120 மொழிகள் இருக்கிறது. ஆனால் அங்கு மொழிப பிரச்சனை இல்லை. டாகாலோக் பொதுவான மொழியாக அனைவராலும் பேசப்படுகின்றது.


Thirumal Kumaresan
மார் 13, 2025 09:42

நல்ல தலைவர் அவர் நாட்டுக்கு நல்லதைத்தான் செய்தார். அவரை சர்வதேச நீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை