உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மாலத்தீவிலிருந்து முழுமையாக வெளியேறிய இந்திய வீரர்கள்

மாலத்தீவிலிருந்து முழுமையாக வெளியேறிய இந்திய வீரர்கள்

மாலே, ஆசிய தீவு நாடான மாலத்தீவில் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், சீன ஆதரவாளரான முகமது முய்சு வெற்றி பெற்றார். அவர், நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார். அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின் போதே, வெற்றி பெற்றால் மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவர் என முய்சு தெரிவித்திருந்தார்.இந்த சூழலில், மாலத்தீவில் முகாமிட்டுள்ள இந்திய வீரர்கள் இம்மாதம் 10ம் தேதிக்குள் வெளியேற கெடு விதிக்கப்பட்டது. இந்தக் கெடு முடியும் முன், அனைத்து வீரர்களும் வெளியேறி விட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, அதிபர் முகமது முய்சுவின் செய்தி தொடர்பாளர் ஹீனா வலித் கூறுகையில், ''குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மாலத்தீவில் இருந்த கடைசி கட்ட இந்திய வீரர்கள் அனைவரும் வெளியேறி விட்டனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Suresh sridharan
மே 12, 2024 08:42

இனி இனி காத்திருக்கும் ஆபத்து சிகப்பால் விளைவுகள் அதிகரிக்கக்கூடும் அனுபவிக்கக்கூடும் அனுபவித்துக் கொள்ளுங்கள் நீங்களாக கேட்டு பெற்றவை வாழ்த்துக்கள்


Loganathan Kuttuva
மே 11, 2024 08:04

இந்தியர்கள் அந்த நாட்டிற்கு சுற்றுலா செல்வதை தவிர்ப்பார்கள்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி