உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரபா பகுதியை கைப்பற்றினால் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி இல்லை: எச்சரிக்கிறார் பைடன்

ரபா பகுதியை கைப்பற்றினால் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி இல்லை: எச்சரிக்கிறார் பைடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: தெற்கு காசாவில் உள்ள ரபா பகுதியை கைப்பற்றினால் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி கிடையாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேற்காசியாவில் உள்ள இஸ்ரேல்- ஹமாஸ் போரை முடிவுக் கொண்டு வர தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. கெய்ரோவில் இரு தினங்களுக்கு முன் நடந்த கடைசி பேச்சில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. போர் நிறுத்தப்பேச்சு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், காசாவில் உள்ள ரபா எல்லைப் பகுதியை இஸ்ரேலிய படைகள் சுற்றி வளைத்தன. அங்கு ஹமாஸ் படையினர் இருப்பதாக சந்தேகிக்கும் பகுதிகளை குறிவைத்து குண்டு வீசினர். இதில், ஆறு பெண்கள், ஐந்து குழந்தைகள் உட்பட, 23 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ரபாவில் தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் படைகள் தயாராக உள்ளன. இந்நிலையில், தெற்கு காசாவில் உள்ள ரபா பகுதியை கைப்பற்றினால் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி கிடையாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். போர் ஆரம்பித்த காலத்தில் இருந்து, ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. ரபாவில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Natarajan Ramanathan
மே 09, 2024 12:17

பாலஸ்தீனத்தை முற்றிலும் அழித்தபின் போர் நிறுத்தம் செய்யலாம் இப்போது தேவை இல்லை


ஆரூர் ரங்
மே 09, 2024 11:47

அத்தைக்கு மீசை முளைத்தபின்.


Kasimani Baskaran
மே 09, 2024 11:37

விரைவில் பைடன் ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கப்படுவார்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை