உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குர்தீஷ் பயங்கரவாதிகள் போர் நிறுத்தம் 40 ஆண்டு வன்முறைக்கு முடிவு

குர்தீஷ் பயங்கரவாதிகள் போர் நிறுத்தம் 40 ஆண்டு வன்முறைக்கு முடிவு

இஸ்தான்புல் : குர்தீஷ் பயங்கரவாதிகள் ஆயுதப்போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்ததால், துருக்கியில் 40 ஆண்டு கால வன்முறை முடிவுக்கு வருகிறது. மேற்கு ஆசிய நாடான துருக்கியின் அதிபராக ரிகெப் டய்யீப் எர்டோகன் பதவி வகிக்கிறார். இங்கு குர்தீஷ் தொழிலாளர் கட்சி அல்லது பி.கே.கே., என கூறிக் கொள்ளும் குர்தீஷ் பயங்கரவாதிகள், 1984ல் இருந்து வன்முறையில் ஈடுபடுகின்றனர். இதன் தலைவர் அப்துல்லா ஒக்லான், 1999ல் இருந்து சிறையில் இருக்கிறார். எனினும் குர்தீஷ் பயங்கரவாதிகள், வன்முறையை தொடருகின்றனர். அமைதி ஒப்பந்தங்கள் பயனற்றுப் போன நிலையில், சிறையில் இருக்கும் அப்துல்லாவை சமீபத்தில் துருக்கி அரசியல் தலைவர்கள் சந்தித்து, வன்முறையை கைவிடும்படி கோரினர். இந்த நிலையில், ஆயுதங்களை கைவிடுவதாக குர்தீஷ் பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனர். அவர்கள் நடத்தும் 'பைராட் நியுஸ் ஏஜன்சி' வாயிலாக வெளியிட்ட அறிக்கையில், 'அமைதி மற்றும் ஜனநாயக சமூகத்தை அமைக்கும் நோக்கில், அப்துல்லா ஓக்லான் உத்தரவுப்படி, உடனடியாக போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. 'குர்தீஷ் அமைப்பைச் சேர்ந்த யாரும் ஆயுத தாக்குதலில் ஈடுபட மாட்டார்கள். துருக்கி, ஈராக், ஈரான், சிரியாவை உள்ளடக்கிய குர்தீஷ் பிராந்தியம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் புதிய வரலாறு எழுதப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. துருக்கியில் அதிபர் எர்டோகன் பதவிக்காலம் 2028ல் முடிகிறது. அதன் பிறகும் பதவியில் தொடரும் வகையில் சட்டத்தை திருத்த குர்தீஷ் ஆதரவு தேவைப்படுவதால், அவரது முயற்சியில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், சிரியாவில் அதிபராக இருந்த பஷிர் ஆசாத்தின் ஆட்சி கவிழ்ப்பு, லெபனானில் ஹெஸ்பெல்லா பயங்கரவாதிகள் பலவீனமானது போன்ற காரணங்களும், குர்தீஷ் பயங்கரவாதிகளின் முடிவுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Laddoo
மார் 02, 2025 10:57

குர்திஷ் போராளிகளில் கிருத்துவ இஸ்லாமியர் ஏறத் தாழ சமஅளவில் உள்ளதாக கூறப் படுகிறது. அவர்கள் மேற்கத்திய நாகரீகத்தை பின்பற்றுகின்றனர். மேலும் அவர்கள் தங்களுக்கென்று ஓர் தனி நாடு கேட்கின்றனர். அதை முன்னிட்டு டர்கியில் குண்டுவெடிப்பில் ஈடுபட்டனர்


visu
மார் 02, 2025 09:33

குர்டிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்கலாம் இப்போது இது இரான் இராக் துருக்கி சிரியா என பல நாடுகளில் பிரிந்து யுள்ளது இவர்கள் இஸ்லாமியா தீவிரவாதத்தை கட்டுக்குள் வைத்து உள்ள ஒரு இஸ்லாமிய பிரிவினர்


Kasimani Baskaran
மார் 02, 2025 07:25

வாக்கையே போராட்டம் என்று அதிக நாள் தொடரமுடியாது...


m.arunachalam
மார் 02, 2025 05:18

எல்லோரும் அமைதியாக வாழ்வோம் . வன்முறை தீர்வல்ல . வாழ்த்துக்கள் . இங்குள்ள ஜாதி தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் .


சமீபத்திய செய்தி